கூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து!

|

கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் உள்ள மால்வேர் செயலிகளைக் கண்டறிந்து நீக்கம் செய்து வருகிறது. இதன் விளைவாகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து சுமார் 40 செயலிகளை அர்ஹிரடியாக நீக்கம் செய்துள்ளது.

கூகுளின் Dangerous Apps பிரிவு

கூகுளின் Dangerous Apps பிரிவு

Dangerous Apps என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் கடந்த மாதம் சுமார் 40 மால்வேர் செயலிகளை நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு புதிய செயலியின் பெயரை இந்த பிரிவின் கீழ் கூகுள் சேர்த்துள்ளது.

CamScanner செயலி

CamScanner செயலி

CamScanner என்றழைக்கப்படும் இந்த செயலியைத் தான் கூகுள் நிறுவனம் தற்பொழுது தனது Dangerous Apps பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!அமேசான்: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத தள்ளுபடி அறிவிப்பு.!

1 மில்லியன் பயனரில் நீங்களும் ஒருவரா?

1 மில்லியன் பயனரில் நீங்களும் ஒருவரா?

1 மில்லியன் பயனர்களின் நீங்களும் ஒருவராக இருந்தால் உஷார் ஆக்கிக்கொள்ளுங்கள், உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த செயலி உள்ளதா என்று சோதனை செய்யுங்கள். அப்படி நீங்களும் இந்த செயலியை, உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி வந்தால் உடனே அதை அன்-இன்ஸ்டால் (Uninstall) செய்துவிடுங்கள்.

PDFகளை உருவாக்கும் செயலியில் என்ன மால்வேர்?

PDFகளை உருவாக்கும் செயலியில் என்ன மால்வேர்?

காஸ்பர்ஸ்கி (Kaspersky) ஆராய்ச்சியாளர்களால், இந்த மால்வேர் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. OCR எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெக்னிகேஷன் முறைப்படி PDFகளை உருவாக்க இந்த CamScanner செயலி பயன்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைப்படி இந்த செயலி தீங்கிழைக்கும் விளம்பரங்களைப் பயனர்களுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ கொண்டு செல்ல தடை! ஏன் தெரியுமா?விமானங்களில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ கொண்டு செல்ல தடை! ஏன் தெரியுமா?

'ட்ரோஜன் டிராப்பர்' என்றால் என்ன?

'ட்ரோஜன் டிராப்பர்' என்றால் என்ன?

இந்த தீங்கிழைக்கும் விளம்பரங்கள் மூலம் 'ட்ரோஜன் டிராப்பர்' என்றழைக்கப்படும் தீம்பொருளை பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் பதிவிடுகின்றனர். இதனால் பயனர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. பயனர்களின் பாதுகாப்பும் தற்பொழுது சந்தேகத்திற்குரியது ஆகியுள்ளது.

கூகுள் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

கூகுள் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி

முக்கியமாக இந்த ட்ரோஜன் டிராப்பர்களை பயன்படுத்தி உங்கள் வங்கி தகவல்களைத் திருடலாம் அல்லது போலி சந்தாக்களுடன் உங்களை இணைக்கலாம். இதனால் கூகுள் நிறுவனம் இந்த செயலியைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்?செவ்வாய் கிரக ஏலியன்கள் கையில் இருக்கும் அணுஆயுதம்:நாசாவின் தகவல்?

ஆன்டிவைரஸ் கொண்டு ஸ்கேன் செய்யுங்கள்

ஆன்டிவைரஸ் கொண்டு ஸ்கேன் செய்யுங்கள்

உங்கள் ஸ்மார்ட்போனில் CamScanner இருந்தால் உடனே நீக்கம் செய்து ஒருமுறை ஆன்டிவைரஸ் கொண்டு ஸ்கேன் செய்துவிடுங்கள் என்று கூகுள் அறிவுரைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Issues Warning To Uninstall This Malware App Right Away : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X