மினி டாக்டர்.. பிபி, சுகர், ஸ்லீப் மானிட்டரிங்.. பிக்சல், Fitbit மாடல்களுக்கு Google ஹெல்த் ஆப் அப்டேட்!
ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) யூசர்களுக்கு கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஹெல்த் ஆப்பின் (Google Health App) புதிய 5.11 அப்டேட்டை களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டில் உடல்நல கண்காணிப்பு, தானியங்கி உடற்பயிற்சி பதிவு, சர்க்கரை அளவு கண்காணிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்பு ஆகியவற்றில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கூகுள் ஹெல்த் பிரீமியம் சந்தா வைத்துள்ள ஃபிட்பிட் ஏர் (Fitbit Air) யூசர்களுக்கும் புதிய ஹெல்த் கார்டியன் அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரத்த அழுத்த மாற்றங்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போக்குகளை யூசர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதற்கான முதல் மாதாந்திர ஆரோக்கிய சுருக்க அறிக்கை (Monthly Health Summary) வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் யூசர்களுக்கு கிடைக்கும்.

இதயத்திற்கு அழுத்தம் தரும் இரத்த அழுத்த போக்குகளை அறிய, யூசர்கள் அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ஃபிட்பிட் ஏர் மாடலை அணிந்திருக்க வேண்டும். அதேபோல், வளர்சிதை மாற்றத்தை கண்காணிக்கும் இன்சுலின் எதிர்ப்பு வசதியை பெற, அக்டோபரில் குறைந்தது ஏழு பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து இந்த வாட்சை அணிந்திருப்பது கட்டாயமாகும்.
ஃபிட்பிட் ஏர் மற்றும் பிக்சல் வாட்ச் 3 (Pixel Watch 3), பிக்சல் வாட்ச் 4 (Pixel Watch 4), பிக்சல் வாட்ச் 5 (Pixel Watch 5) ஆகிய மாடல்களிலும் தானியங்கி உடற்பயிற்சி கண்காணிப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. நீச்சல், பளு தூக்குதல், ரோக்கெட் (Rocket) விளையாட்டுகள் மற்றும் குழு விளையாட்டுகள் (Team Sports) உட்பட 10 முதல் 100 வகையான உடற்பயிற்சிகளை இந்த புதிய அமைப்பு இப்போது தானாகவே கண்டறியும்.
குறைந்தது 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மற்றும் இதய துடிப்பை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள் இதில் தானாகவே பதிவு செய்யப்படுகின்றன. உடற்பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குள் அதன் முழு விவரங்கள் கூகுள் ஹெல்த் ஆப் பக்கத்தில் உடனடியாக தோன்றும். இந்த புதிய முறை உடற்பயிற்சிகளை இருமடங்கு துல்லியமாக கண்டறிவதுடன், விடுபடும் உடற்பயிற்சிகளின் வாய்ப்புகளை பாதியாக குறைக்கிறது.

சர்க்கரை அளவை கண்காணிக்கும் பிரிவில் பிளட் குளுக்கோஸ் என்ற பெயர் இப்போது குளுக்கோஸ் என மாற்றப்பட்டு, தனிப்பயன் இலக்குகளை நிர்ணயிக்கும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உள்ள யூசர்கள் மட்டும் அபோட் நிறுவனத்தின் லிங்கோ ஆப் (Lingo App) ஆப்பை இதனுடன் இணைத்து, 30 நிமிடங்களுக்குள் தங்களின் குளுக்கோஸ் அளவுகளை நேரடியாக பார்வையிடும்படி அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் சந்தாதாரர்கள் தங்களின் குளுக்கோஸ் குறித்த சந்தேகங்களை கூகுள் ஹெல்த் கோச் மூலம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். மேலும், தூக்க கண்காணிப்பு வசதியிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரவில் கழிவறைக்கு செல்வது போன்ற குறுகிய நேர விழிப்புகளை காலடி தரவுகள் (Steps Data) மூலம் கண்டறிவதுடன், தவறாக பதிவான குட்டித் தூக்க விவரங்களை கார்டில் இருந்தே நீக்கலாம்.
அடுத்த ஒரு வாரத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களுக்கு இந்த 5.11 அப்டேட் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதுதவிர, அக்டோபர் 27ஆம் தேதியன்று புதிதாக விற்பனைக்கு வரும் ஃபிட்பிட் எட்ஜ் ஸ்மார்ட்வாட்ச் மாடலிலும் இந்த ஹெல்த் கார்டியன் மற்றும் தானியங்கி உடற்பயிற்சி கண்காணிப்பு வசதிகள் தொடக்கம் முதலே யூசர்களுக்கு பயன்பாட்டிற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதிகள் பொதுவான ஆரோக்கியத்திற்கானவை மட்டுமே தவிர, நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்த நோய்களை கண்டறியும் மருத்துவ கருவிகள் அல்ல என்று கூகுள் தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், ஜெமினி ஆப் (Gemini App) ஆப்பில் இருந்து இதன் ஏஐ வசதிகள் தனித்து செயல்படுவதால், மருத்துவ ஆலோசனைகளுக்கு எப்போதும் மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது.


Click it and Unblock the Notifications
