5 லட்சம் டவுன் கண்ட பிளே ஸ்டோர் 13 செயலிகள் அதிரடி நீக்கம்.!

பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சி

|

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மொத்தம் 13 செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயலிகள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர்களை இன்ஸ்டால் செய்வது கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்து இருக்கிறது.

5 லட்சம் டவுன் கண்ட பிளே ஸ்டோர் 13 செயலிகள் அதிரடி நீக்கம்.!

பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியிருக்கும் செயலிகள் சராசரியாக சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான டவுன்லோடுகளை பெற்று இருந்தன. இவற்றில் பிரபல கேம்களாக அறியப்படும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இதர செயலிகள் இடம்பெற்று இருந்தன.

 இசெட் நிறுவனம்:

இசெட் நிறுவனம்:

இசெட் (ESET) பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் மால்வேர் பரப்பிய 13 செயலிகள் குறித்த விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த செயலிகள் பிளே ஸ்டோரின் டிரென்டிங் பகுதியில் இடம்பெற்று இருந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 கிராஷ் ஆனது:

கிராஷ் ஆனது:

எனினும், மால்வேர் நிறைந்த செயலிகள் தற்சமயம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. கூகுள் இவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலிகள் அனைத்தும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். கேமினை திறந்து விளையாட முற்படும் போது செயலி கிராஷ் ஆனது.

கூகுள் பிளே ஸ்டோர் கோளாறு:

கூகுள் பிளே ஸ்டோர் கோளாறு:

மேலும் இந்த செயலிகள் பயனர்களை கேம் சென்டர் எனும் கூடுதல் ஏ.பி.கே. ஒன்றை இன்ஸ்டால் செய்யக் கோரியிருக்கிறது. இதே போன்ற கோளாறு கூகுள் பிளே ஸ்டோரில் பலமுறை அரங்கேறி இருக்கிறது.

கூகுள்:

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3.6 கோடி மொபைல் சாதனங்களை ஆட்வேர் மூலம் பாதிப்பில் ஆழ்த்த கூகுள் காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

Best Mobiles in India

English summary
Google has reportedly removed 13 apps from the Google: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X