7 அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்.! காரணம் என்ன?

|

கூகுள் நிறுவனம் ஆபத்தான மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஆப் வசதிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக, மோசடி செய்பவர்கள் தங்களின் செயலிகள் ஆப் ஸ்டோரில் இடம்பெற கூகிள் நிறுவனம் வைத்திருக்கும் சோதனைகள் மற்றும் தேவைகளை புரிந்துகொண்டு புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து ஏமாற்றி வந்தனர், ஆனால் கூகுள் நிறுவனம் மெல்ல மெல்ல தீங்கிழைக்கும் செயலிகளை நீக்கி வருகிறது என்று தான் கூறவேண்டும்.

 மால்வேர் அலர்ட் காரணமாக பிளே

இந்நிலையில் மால்வேர் அலர்ட் காரணமாக பிளே ஸ்டோரிலிருந்து ஏழு அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். வெளிவந்த
தகவலின் அடிப்படையில், காஸ்பர்ஸ்கி நிபுணர் ஒருவர் பிளே ஸ்டோரில் சில அப்ளிகேஷனில் மால்வேர் இருப்பதைக்கண்டுபிடித்துள்ளார்.

ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..ரூ. 299 விலை முதல் 100 ஜிபி டேட்டா வரை கிடைக்கும் Airtel மை வைஃபை திட்டங்கள்.. இது வேற லெவல் ப்ரோ..

காஸ்பர்ஸ்கி நிபுணர், ப

மேலும் காஸ்பர்ஸ்கி நிபுணர், பயனர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த அப்ளிகேஷன் குறித்து விவரங்களையும் சொல்லி இருந்தார். அதன் பேரில் கூகுள் நிறுவனம் அந்த அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான நோக்கியா எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

வனம் நீக்கியுள்ள அந்த

இப்போது கூகுள் நிறுவனம் நீக்கியுள்ள அந்த அப்ளிகேஷன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.QRcode Scan - QR கோட் ஸ்கேன்
2.EmojiOne Keyboard - எமோஜி ஒன் கீபோர்ட்
3.Battery Charging Animations Battery Wallpaper - பேட்டரி சார்ஜிங் அனிமேஷன்கள் பேட்டரி வால்பேப்பர்
4.Dazzling Keyboard - Dazzling கீபோர்டு
5.Volume Booster Louder Sound Equalizer -வால்யூம் பூஸ்டர் லவுட் சவுண்ட் ஈக்வலைசர்
6.Super Hero-Effect - சூப்பர் ஹீரோ எஃபெக்ட்
7.Classic Emoji Keyboard - கிளாசிக் எமோஜி கீபோர்ட்

இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா?

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த

குறிப்பாக மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன்களை முன்னதாகவே இன்ஸ்டால் செய்துள்ள பயனர்கள் உடனடியாக நீக்க வேண்டும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இலவசமாக உங்களுக்கு ஏதேனும் ஒரு முக்கிய சேவை கிடைக்கிறது என்றால் ஒரு முறைக்கு இரண்டு முறையாவது யோசித்துக்கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைக்கும் எந்த ஒரு சேவைக்குப் பின்னணியில் ஏதேனும் ஒரு லாபகரமான செயல்பாட்டை அந்த ஆப்ஸ்கள் உங்களுக்குத் தெரியாமல் பின்னணியில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!50எம்பி ரியர் கேமரா மற்றும் தரமான டிஸ்பிளே வசதியுடன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள்

குறிப்பாக இப்போது வரும் ஒரு சில ஆப் வசதிகள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சில ஆப் வசதிகள் நமது எஸ்எம்எஸ், ஓடிபி, அழைப்புகள் போன்றவற்றை திருடும் வகையில் வாய்ப்பு உள்ளது.
இருந்தபோதிலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?வெடித்து சிதறிய OnePlus Nord 2 5G.. பலத்த தீக்காயத்துடன் பயனர் சிகிச்சை.. OnePlus வெடிக்க என்ன காரணம்?

பிளே ஸ்டோரில் 8 ஜோக்கர் வைரஸ்

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட 8 புதிய ஆப்வசதிகளை நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜோக்கர் வைரஸ் தாக்கப்பட்ட இந்த 8 ஆப் வசதிகளும் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி போன்ற பல்வேறு தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜோக்கர் மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல் இதுதான். Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages,Travel Wallpapers, Super SMS. இந்த ஆப் வசதிகளை உடனே டெலிட் செய்வது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Google has removed 7 applications from the Play Store.! What is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X