அலோ அப்ளிகேஷனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூகுள்!

தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் எதிர்பார்த்த அளவிற்கு, அலோ அப்ளிகேஷன் வெற்றி அடையவில்லை.

|

அலோ அப்ளிகேஷனின் மேம்பாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ள கூகுள் நிறுவனம், அதற்கு பதிலாக ஆன்ட்ராய்டு மெசேஜஸ் அப்ளிகேஷனின் உருவாக்கத்தில் தனது இன்ஜினியர்களைப் பணியமர்த்தி, அதற்கு 'செட்ஸ்' என்று பெயரிட்டுள்ளது.

அலோ அப்ளிகேஷனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூகுள்!


கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது அலோ என்ற மெசேஞ்ஜர் அப்ளிகேஷனை, கூகுள் நிறுவனம் வெளியிட்டது. இந்த அப்ளிகேஷன், ஆன்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஐமெசேஜ் ஊடகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஒரு கச்சிதமான மெசேஜிங் அப்ளிகேஷனாக அலோ மெசேஞ்ஜரை, கூகுள் நிறுவனம் விளம்பரம் செய்தது. இதில் ஸ்டிக்கர்கள், ஜிஐஎஃப்-கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் காணப்பட்டதோடு, இது ஒரு வெப்-கிளையன்ட் ஆகவும் இருந்தது.

ஆனால் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ள சில தகவல்களின் அடிப்படையில், அலோ அப்ளிகேஷனின் மேம்பாட்டை நிறுத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம், அதற்கு பதிலாக ஆன்ட்ராய்டு மெசேஜஸ் அப்ளிகேஷனின் உருவாக்கத்தில் தனது இன்ஜினியர்களைப் பணியமர்த்தி உள்ளதாகத் தெரிகிறது. ஐமெசேஜ் சேவைக்கு மாற்றாக அமையும் வகையில், ஆர்சிஎஸ் மற்றும் பிற அம்சங்கள் கொண்டதாக அதை கட்டியமைக்க, கூகுள் நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் எதிர்பார்த்த அளவிற்கு, அலோ அப்ளிகேஷன் வெற்றி அடையவில்லை. இது ஒரு தொழில்நுட்ப ஜாம்பவானின் வெளியீடு என்ற முறையில் மட்டுமே, அதன் அறிமுகத்தின் போது கவனத்தை ஈர்த்தது. ஐபோன் பயனர்கள் ஐமெசேஜ் அளிக்கும் உள்ளடக்கத்தை பயன்படுத்தியதும் ஆன்ட்ராய்டு பயனர்கள் மெசேஜிங் அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது எல்லாரும் அறிந்ததே. எனவே ஒரு சாதாரண செட் அப்ளிகேஷனைக் காட்டிலும் தனது தளத்தில் சிறந்த ஒன்றை பயனர்களுக்கு அளித்தால் மட்டுமே கூகுளின் இந்த தளத்திற்கு பயனர்களை கொண்டு வர முடியும். அதில் ஆன்ட்ராய்டு மெசேஜஸ் உள்ளிட்ட ஆர்சிஎஸ் ஆகியவற்றை கூறலாம்.

அலோ அப்ளிகேஷனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது கூகுள்!


இணையதளத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில், தனது புதிய தயாரிப்பிற்கு 'செட்' என்று கூகுள் பெயரிட்டுள்ளதாகவும், இந்த தொழில்நுட்ப ஜாம்பவானின் தயாரிப்பான ஹேங்அவுட் செட் போல இல்லாமல், ஒரு வித்தியாசமான அப்ளிகேஷனாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றன. அந்த தகவல்களில்படி, கூகுள் நிறுவனத்தால் அலோ நிறுத்தப்பட போவதில்லை என்பதால் அதை பயன்படுத்துபவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். தற்போதைக்கு அலோவின் மேம்பாடு மற்றும் முதலீட்டை நிறுத்தி வைத்துள்ள கூகுள் நிறுவனம், தான் நினைத்துள்ள இந்த 'செட்' அப்ளிகேஷனின் வெளியீடு மீது கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் அலோ அப்ளிகேஷனுக்கு புதுப்பிப்புகள் ஏதாவது இனி வெளியிடப்படுமா அல்லது கூகுள் ஹேங்அவுட்ஸை போல மந்தமான நிலையை எட்டுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூகுளை குறித்த எங்கள் சமீபகால செய்திகள் ஒன்றில், லாப நோக்கில் அல்லாத கைஆர்க் என்ற பெயரிலான நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள கூகுள் நிறுவனம், இயற்கை சீற்றங்கள் அல்லது மனித நடவடிக்கைகளின் மூலம் தவிர்க்க முடியாத நிரந்தர அழிவின் விளிம்பில் சிக்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடக்கலைப் பகுதிகளை மீட்கும் பணியில் உதவ உள்ளது. இந்த கூட்டுறவு பணியில், ஓபன் ஹேரிடேஜ் பிரஜெக்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டுறவு மூலம் மேற்கண்ட வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களை லேசர் ஸ்கேன்னர்கள் உடன் கைஆர்ட் நிறுவனத்தின் 3டி லேசர்-ஸ்கேன்னிங் தொழில்நுட்பமான மில்லிமீட்டர் பிரிஸிசன் ஆகியவை மூலம் 3டி வடிவமைப்பில் படம் பிடிக்கும் பணியில் செயலாற்ற உள்ளது. இது குறித்து முழு செய்தி இதோ.

Best Mobiles in India

English summary
Google halts Allo app development to favor android messaging; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X