நீங்கள் அதிகம் எதிர்பார்த்த கூகுள் நிறுவனத்தின் 7எம்பி ஆப்.! கண்டிப்பாக நேரம் மிச்சப்படும்.

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது குறிப்பாக நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

 கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் கூகுள் கோ ( Google Go ) என்கிற ஒரு ஆப்பை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது சிலர் இந்த செயலியை பயன்படுத்தி இருக்கலாம்.பின்பு ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட லைட் வெயிட் ஆப் ஆனது கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது

கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது

இருந்தபோதிலும் ஒரு சில நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மட்டுமே அணுக கிடைத்த இந்த கூகுள் கோ ஆப், இப்போது உலகம் முழுவதும் உள்ள ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்படி கூகுள் நிறுவனம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.! விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.!

வெறும் 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்

வெறும் 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்

அதன்படி கூகுள் நிறுவனம் சிறந்த இலகுரக வெறும் 7 எம்பி அளவிலான கூகுள் கோ ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த ஆப் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.


கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் இயங்கும் எந்த ஒரு ஸ்மார்ட் போனுக்கு கிடைக்கும். இந்த இலகுரக கூகுள் கோ ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்ய முடியும்.

 நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிக்கு  மொழி பெயர்க்கும்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிக்கு மொழி பெயர்க்கும்

குறிப்பாக கூகுள் தேடுபொறியை தவிர்த்து இந்த கூகுள் ஆப் ஆனது நிகழ்நேர மொழிபெயர்ப்பு எனும் வசதியை தன்னுள் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை ஒரு விளம்பரப் பலகையோ அல்லது மொழிகளைத் தாங்கிய ஆவணத்தை காட்ட கூகுள் கோ ஆப் ஆனது உடனே நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழிக்கு மொழி பெயர்க்கும்

அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.!அதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.!

 மிக சுலபமாக மொழிபெயர்க்க உதவும்

மிக சுலபமாக மொழிபெயர்க்க உதவும்

கூகுள் கொண்டுவந்துள்ள இந்த வசதியின் மூலம் வலைப்பக்கங்களை மிகவும் அருமையாக மொழிபெயர்க்க முடியும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை கண்டுபிடிக்க ஒரு வலைப் பக்கத்தின் முழு பக்கத்தையும் ஸ்கிரோல் செய்ய உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம், மிக எளிமையாக மொழிபெயர்க்கும்.குறிப்பாக ஏதாவது ஆங்கில கட்டுரையில் இருந்து முக்கியமான வரிகளை மிக சுலபமாக மொழிபெயர்க்க உதவும்.

கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது

கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது

கூகுள் கோ ஆப் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் கூட மேம்பட்ட ரெஸ்பான்ஸ் வழங்கும் என்று கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. கண்டிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆப்பை பயன்படுத்த தொடங்குவார்கள் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் இந்த செயலியில் சேர்க்கப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Best Mobiles in India

English summary
Google Go LightWeight Search App Goes Live Globally And More Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X