ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

By Siva
|

வேலை நிமித்தமாகவும் அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவும் குடும்பத்தினர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது வீடியோ காலிங் வசதிதான். இதன் மூலம் உங்கள் குடும்பத்தினர் உங்கள் அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

ஆனால் அதே நேரத்தில் எந்த வீடியோ காலிங் ஆப்ஸ் சிறந்தது என்பதை கண்டறிவதில் பலர் குழப்பத்தில் உள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோர் சென்றால் உங்களுக்கு ஏகப்பட்ட வீடியோ காலிங் ஆப்ஸ்கள் கிடைக்கும். ஆனால் அவற்றில் சிறந்தது என்பதை எப்படி கண்டுபிடிப்பது

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு!

ஸ்கைப், ஹாங்ஸ் அவுட்ஸ், ஃபேஸ்புக் மெசஞ்சர், மற்றும் சமீபத்தில் அறிமுகமான கூகுள் டியோ. இவற்றில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்கைப்புக்கும், கூகுள் டியோவுக்கும் உள்ள ஒருசில வித்தியாசங்களை தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

எதில் லாகின் பிராசஸ் எளிது?

ஒரு ஆப்-ஐ பயன்படுத்துவதரு முன்னர் அதில் லாகின் செய்ய ஏகப்பட்ட பிராசஸ்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் பலர் கடுப்பாகி லாகின் செய்யாமல் விட்டுவிடுவதோடு அந்த ஆப்-ஐ அன் இன்ஸ்டால் செய்துவிடவும் வாய்ப்பு உண்டு. உலகில் பெரும்பாலானோர் ஸ்கைப் ஆப்-ஐ பயன்படுத்தினாலும் அதன் லாகின் பிராசஸ் ரொம்ப நீளமானது.

சிக்கல் செய்யும் ஜியோ சிம், 'அசால்ட்' ஆக சரிசெய்வது எப்படி..?

ஆனால் கூகுள் டியோவில் இந்த பிரச்சனை இல்லை. நீங்கள் ஏற்கனவே உங்கள் கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்திருந்தால் போதும் ஒருசில நொடிகளில் இடஹி நீங்கள் பயன்படுத்த தொடங்கிவிடலாம்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

டேட்டா பயன்பாடு எதில் குறைவு?

வீடியோ காலிங் என்றால் மிக அதிகமான டேட்டா செலவாகி விடும் என்பது தெரிந்ததே. அதிலும் ஸ்கைப் குறித்து சொல்லவே தேவையில்லை. உங்களது பர்ஸை டேட்டா மூலம் பதம் பார்த்துவிடும்.

ஐபோன் 6 எஸ்-ல் இலவசமாக 60ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

ஆனால் கூகுள் டியோ அப்படி இல்லை. குறைவான டேட்டாக்கள் மூலம் திருப்தியான சேவையினை தருவதால் உங்களது முதல் ஆப்சன் கூகுள் டியோவாகத்தான் இருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் இரண்டும் உள்ளதா?

தொலை தூரத்தில் இருந்து உங்கள் நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினர்களையோ தொடர்பு கொள்ள வீடியோ காலிங் வசதிதான் பெஸ்ட் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் எமர்ஜென்சியாக பேச வேண்டும் என்றாலோ அல்லது குறைவான டேட்டா செலவின் மூலம் ஒரு விசயத்தை தெரிவிக்க வேண்டும் என்றாலோ வாய்ஸ் காலிங் மட்டும் போதுமானது. ஆனால் இந்த விஷயத்தில் கூகுள் டியோவை விட ஸ்கைப்தான் சிறந்தது. இதன் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் மூலம் பேசலாம்.

ஆனால் கூகுள் டியோவில் உங்களுக்கு இரண்டாவது ஆப்சன் கிடையாது. வீடியோ காலிங் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

குரூப் கால் எதில் பேச முடியும்?

நீங்கள் ஒருவருடன் மட்டுமின்றி பலருடன் குரூப் கால் பேச வேண்டும் என்றால் உங்களுக்கு கூகுள் டியோ சரிப்பட்டு வராது. ஏனெனில் அதில் இன்னும் குரூப் கால் சிஸ்டம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் ஸ்கைப் இதில் ஸ்பெஷாலிட்டி. குரூப் கால் வசதியின் மூலம் ஒரே நேரத்தில் பலருடன் உங்கள் கருத்துக்களை வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்கைப் மற்றும் கூகுள் டியோ இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள்?

இரண்டிலும் இருக்கும் வசதிகள் என்னென்ன தெரியுமா?

கூகுள் டியோ இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் மட்டுமே ஒர்க் ஆகும். ஆனால் ஸ்கைப்பில் பலவிதமான ஆப்சன்கள் உள்ளது.

ஸ்கைப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மட்டுமின்றி ஆப்பிள், விண்டோஸ், லினக்ஸ், பிளாக்பெர்ரி, அமேசான் ஃபயர் போன், டேப்ளட்ஸ், ஆகியவற்றிலும் செயல்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's the comparison between Google Duo and Skype. Read more to know which one you should use as per your need.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X