Google Duo அறிமுகம் செய்த அட்டகாச வீடியோ காலிங் சேவை! இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா?

|

கொரோனா வைரஸ் தோற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது தான் ​​வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஊரடங்கின் பொது வீட்டில் இருந்து வேலை பார்பபவர்களின் அலுவலக மீட்டிங்களும் இந்த வீடியோ காலிங் அழைப்பு பழக்கத்தை அதிகமாக்கியுள்ளது. ஜூம் பயன்பாட்டில் பாதுகாப்பில்லை என்ற பின் பயனர்கள் கூகிள் மீட்ஸ் பயன்படுத்தி வந்தனர்.

கூகிள் டியோ புதிய சேவை

கூகிள் டியோ புதிய சேவை

தற்பொழுது, கூகிள் நிறுவனம் தனது கூகிள் டியோ பயன்பாட்டில் இந்த வீடியோ கால் கான்பிரன்சிங் அழைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளது. தற்பொழுது கூகிளின், இந்த கூகிள் டியோ பயன்பாட்டின் மூலம் இனி பயனர்கள் அதிகபட்சமாக 32 பங்கேற்பாளர்களுடன் குழு வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகிள் டியோ வெப்

கூகிள் டியோ வெப்

கூகுள் மீட்ஸ் பயன்பாட்டை பயனர்கள் அலுவலக விஷயங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், தங்களின் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பாக தொடர்பில் இருந்துகொள்ள இனி கூகிள் பயனர்கள் கூகிள் டியோவை பயன்படுத்தலாம் என்று கூகிள் அறிவித்துள்ளது. தற்பொழுது கூகிள் டியோவில் கிடைக்கும் இந்த அம்சம் வலைதள பக்கத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!

இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா?

இனி இவ்வளவு பெரும் ஒரே அழைப்பிலா?

கூகிள் டியோ வலை வீடியோ அழைப்புகளின் வரம்பு இதற்கு முன்பு 12 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் இந்த வரம்பு எட்டாக இருந்தது, மக்களின் அதிக தேவை காரணமாக தற்பொழுது 32 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் பயனர்கள் அதிகபடச்சமாக இப்பொழுது 8 நபர்கள் வரை குழு வீடியோ காலிங் அம்சத்தை பயன்படுத்த முடியுமென்று கூகிளில் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பின் மூத்த இயக்குநராக இருக்கும் சனாசஹரி கூறியுள்ளார்.

எப்படி பயன்படுத்துவது

எப்படி பயன்படுத்துவது

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் முதலில் உங்களுடைய கூகிள் கிறோம் பிரௌசரை அப்டேட் செய்ய வேண்டும். பின் உங்களுடைய கூகிள் கணக்கைப் பயன்படுத்தி டியோவின் வலை பதிப்பில் உள்நுழைய வேண்டும், இதற்கு உங்களுடைய தொலைபேசி எண் தேவையில்லை. கூகிள் டியோவின் வலைத்தள பக்கமான duo.google.com டெஸ்க்டாப் தளத்தை கிளிக் செய்யுங்கள்.

2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு! ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை!2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு! ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை!

பாதுகாப்பான வீடியோ அழைப்பு

பாதுகாப்பான வீடியோ அழைப்பு

மேலும் கூகிளின் கூற்றுப்படி, கூகிள் டியோ வழியாக பயனர்கள் செய்யும் அனைத்து வீடியோ அழைப்புகளும் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

WebRTC API பாதுகாப்பு

WebRTC API பாதுகாப்பு

வீடியோ அழைப்புகள் வரும்போது கூட பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்வதில் கூகிள் ஈடுபட்டுள்ளது, இதற்காக பாதுகாப்பை உறுதிப்படுத்த WebRTC API ஐப் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Duo’s web group video call limit increased to 32 participants : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X