கூகுள் டியோவை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கும் வசதியை வழங்கும் அப்டேட்.!

செயல்திறன் குறைவு மற்றும் அழைப்புகளில் வால்யூம் குறைவு போன்ற சில பிரச்சனைகளால்,சமீபத்தில் தனது 30வது அப்டேட்டை கூகுள் நிறுவனம் திரும்ப பெற்றுக்கொண்டது. வீடியோ சேட் செய்யும் மொபைல் செயலியான கூகுள் டிய

|

வீடியோ சேட் செய்யும் மொபைல் செயலியான கூகுள் டியோவிற்கான புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். போன் நம்பரை கொடுத்து
டியோ கணக்கை துவங்குவதற்கு பதிலாக கூகுள் அக்கவுண்ட் மூலமே அதை செய்யும் வகையில் புதிய வெர்சனில் (வெர்சன்31) வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 31வது வெர்சன் மூலம், டியோவில் பதிவு செய்ய போன் நம்பர் அவசியமில்லை என்பதால், மொபைல் செயிலியில் மட்டுமில்லாமல் பிற சாதனங்களில் கூட உபயோகிக்கலாம்.

கூகுள் டியோவை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கும் வசதியை வழங்கும் அப்டேட்

பிபாம் நிறுவனத்தின் அறிக்கையின் படி, கூகுள் டியோ செயலியின் Settings பகுதியில் புதிதாக 'Add Account' என்ற தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மொபைல் எண் அல்லது ஈமெயில் முகவரி என இரண்டில் எந்த வகையில் டியோ அழைப்புகள் வரவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். இது ஏற்கெனவே உள்ள வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் தற்சமயம் உபயோகப்படுத்த இயலாது எனவும், பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டவுடன் தெரிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயல்திறன் குறைவு மற்றும் அழைப்புகளில் வால்யூம் குறைவு போன்ற சில பிரச்சனைகளால்,சமீபத்தில் தனது 30வது அப்டேட்டை கூகுள் நிறுவனம்
திரும்ப பெற்றுக்கொண்டது.

கூகுள் டியோ நிறுவனத்தின் முக்கிய பொறியாளர் ஜஸ்டின் யுபர்டி டிவிட்டர் வாயிலாக கூறுகையில், அழைப்புகளை செய்யும் போது குறைந்த ஒலி
பிரச்சனைகளால் டியோ மொபைல் செயலியின் செயல்திறன் குறைந்துவிட்டது. இது போன்ற முக்கிய பிரச்சனைகளால் தனது அனைத்து அப்டேட்களையும்
கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சில ஆண்ராய்ட் பயனர்கள் டியோ V30ல் குறைந்த ஒலி சார்ந்த பிரச்சனைகளை சந்தித்ததால், அந்த அப்டேட் தற்காலிகமாக
நிறுத்திவிட்டு, பிரச்சனைகள் உள்ள ஆண்ராய்டு பயனர்கள்களுக்கு v29.2க்கு திருப்பியுள்ளோம் . நீங்களும் இதுபோன்ற பிரச்சனைகளை
சந்தித்தால் v29.2 க்கு திரும்பலாம் என்றார்.

கூகுள் டியோவை கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கும் வசதியை வழங்கும் அப்டேட்

கிஷ்பாட் வாசகர்களான நீங்கள் இது போன்ற பிரச்சனைகளை கூகுள் டியோ செயலியில் சந்தித்தால், உடனே செயலியின் வெர்சனை சரிபார்க்கவும். V30 என்றால் எளிதாக முந்தய வெர்சனுக்கு திரும்பி பிரச்சனைகளை சரிசெய்து கொள்ளலாம். அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து கூகுள் வெளியிடும் புதிய அப்டேட் பற்றிய தகவ்லகளை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Google Duo gets Google Account Linking option ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X