அதிசய கடிகாரம்: கூகுள் புதிய கானா கடிகாரம்.!
கூகுள் ஸ்ட்ரீமிங் சேவையை இணைக்கும் விதமாக இந்த புதிய கூகுள் கடிகாரம் அப்டேட் பிளேஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

கூகுள் ஸ்ட்ரீமிங் சேவையை இணைக்கும் விதமாக இந்த புதிய கூகுள் கடிகாரம் அப்டேட் பிளேஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. உங்களுக்குப் பிடித்த பிளேலிஸ்ட்கள் மற்றும் பாடல்களை உங்கள் ஸ்பாட்டிஃபை வலி நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்து அலாரம் டியூனாக இயக்குவதற்கு இந்த புதிய கூகுள் கடிகாரம் அனுமதியளிக்கிறது.
இந்த புதிய அப்டேட் இலவச மற்றும் பிரீமியம் ஸ்பாட்டிஃபை பயனர்களுக்கு அனுமதி வழங்குகிறது, நீங்கள் சமீபத்தில் கேட்ட இசை மற்றும் உங்கள் பிளேலிஸ்ட்களை நேரடியாகத் தேர்வு செய்து, அலாரமாக செட் செய்துகொள்ளலாம்.

இந்த வசதியைப் பெற, ஸ்பாட்டிஃபை மற்றும் கடிகார செயலிகளை புதிய அப்டேட் படி புதுப்பித்துக்கொள்வது அவசியம்.
இச்சேவை பிளேஸ்டோர் இல் இன்று முதல் உலகம் முழுதும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மற்றும் பின்னர் வந்த அனைத்து புதிய வெர்ஷன் ஆண்ட்ராய்டுகளுக்கும் இது இணங்கும்.
கூடுதல் செய்தியாக 9-5 கூகுள் இன் ஒரு அறிக்கையின்படி, யூடூப் இசைக்கு இந்தச் சேவை எதிர்காலத்தில் கூகுள் கடிகார ஒருங்கிணைப்புடன் சேர்க்கப்படும் என்று கூறினார்.
முக்கிய குறிப்பாக ஸ்பாட்டிஃபை மட்டும் இன்றி உங்களுக்குப் பிடித்த அணைத்துப் பாடல்களையும் அலாரமாக வைத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications