Home
Apps

Google குரோம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. Gmail உடன் இணையும் ஆட்டோஃபில் ஆப்ஷன்!

கூகுள் நிறுவனம் தனது கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரில் யூசர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் வெப்சைட்களில் ஆன்லைன் ஃபார்ம்களை நிரப்பும்போது, உங்களது ஜிமெயில் (Gmail) அக்கவுண்டில் இருக்கும் முக்கிய விவரங்களை நேரடியாக ஆட்டோஃபில் (Autofill) ஆப்ஷன் வழியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வழக்கமாக பிரவுசர்களில் இருக்கும் ஆட்டோஃபில் வசதியானது, யூசர்கள் தங்களது புரொஃபைலில் (Profile) ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் முகவரி, போன் நம்பர் மற்றும் பேமெண்ட் விவரங்கள் போன்ற முக்கிய டேட்டாக்களை மட்டுமே காண்பிக்கும். ஆனால், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் மூலம் இமெயிலில் வரும் தற்காலிக மற்றும் உடனடி தகவல்களையும் பிரவுசரால் எளிதாகப் பயன்படுத்த முடியும்.

Google குரோம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. Gmail உடன் Autofill

இந்த புதிய அப்டேட்டில், கூகுள் தனது ஜெமினி (Gemini) ஏஐ தொழில்நுட்பத்தை பர்சனல் இன்டெலிஜென்ஸ் (Personal Intelligence) வசதியுடன் இணைத்துப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் யூசர்களின் இமெயில் அக்கவுண்டில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தகவல்களை அதுவே அடையாளம் கண்டு, வெப் பேஜ்களில் (Web Pages) சம்பந்தப்பட்ட இடங்களை நிரப்பும்போது அந்தத் தகவல்களை உடனடியாக டிஸ்பிளேவில் சஜஸ்ட் செய்யும்.

முக்கியமாக, யூசர்கள் ஒரு வெப்சைட்டில் முக்கியமான வேலையில் இருக்கும்போது, ஏதேனும் ஒரு விவரத்தைத் தேடுவதற்காக அந்த ஆக்டிவ் டேப்பை (Active Tab) விட்டு வெளியேறி இமெயிலை திறக்க வேண்டிய அவசியத்தை இது குறைக்கிறது. இதனால் காப்பி மற்றும் பேஸ்ட் செய்யும் நேரமும் மிச்சமாகி, பிரவுசிங் அனுபவம் இன்னும் வேகமாகவும் மிகவும் சுலபமாகவும் மாறுகிறது.

இந்த வசதி எந்தெந்த தகவல்களை கண்டறியும் என்பதைப் பொறுத்தவரை, ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இ-காமர்ஸ் (E-commerce) விவரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களின் ஆர்டர் ஐடி (Order ID) மற்றும் பார்சல் எங்கே வருகிறது என்பதை கண்காணிக்கும் பேக்கேஜ் டிராக்கிங் நம்பர் (Package Tracking Number) போன்றவற்றை இது உடனடியாகக் காண்பிக்கும்.

அதேபோல, பயண விவரங்களை பொறுத்தவரை பிளைட் கன்ஃபர்மேஷன் கோட் (Flight Confirmation Code), ஹோட்டல் அல்லது டிக்கெட் ரிசர்வேஷன் விவரங்கள் மற்றும் பயண நேரங்களை இது எளிதாக எடுத்துக் கொடுக்கும். மேலும், பல்வேறு சர்வீஸ் ரெக்கார்டுகளுக்கான (Service Records) அக்கவுண்ட் ரெஃபரன்ஸ் நம்பர்கள் மற்றும் இமெயிலில் வரும் கன்ஃபர்மேஷன் ஐடிகளையும் இந்த சிஸ்டம் சரியாக அடையாளம் காணும்.

யூசர்களின் பிரைவசி (Privacy) மற்றும் டேட்டா பாதுகாப்பிற்கு கூகுள் நிறுவனம் இதில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த புதிய ஆட்டோஃபில் வசதியின் வழியாகக் கையாளப்படும் அனைத்து இமெயில் டேட்டாக்களும் முழுமையாக என்கிரிப்ஷன் (Encryption) செய்யப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும், யூசர்களின் தனிப்பட்ட தகவல்கள் எங்கும் கசியாது என்றும் கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது.

மேலும், யூசர்களின் அனுமதி இல்லாமல் இந்த சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக இமெயில் தகவல்களை ஆக்ஸஸ் (Access) செய்யாது. பயனர்கள் தங்களது குரோம் செட்டிங்ஸ் (Chrome Settings) மெனுவிற்கு சென்று, இந்த மேம்படுத்தப்பட்ட ஆட்டோஃபில் வசதியைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவோ, எந்தெந்த ஜிமெயில் டேட்டாக்களைப் பயன்படுத்தலாம் என்ற பர்மிஷன்களைக் (Permissions) கட்டுப்படுத்தவோ அல்லது முழுமையாக ஆஃப் செய்யவோ முடியும்.
இந்த புதிய அப்டேட் முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள யூசர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது டெஸ்க்டாப் (Desktop) மட்டுமின்றி, ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) ஆகிய மொபைல் பிளாட்ஃபார்ம்களுக்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர் என இரண்டிலும் யூசர்கள் இந்த ஆட்டோஃபில் வசதியை தடையின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த வசதியைப் பெறுவதற்கு, யூசர்களின் குரோம் பிரவுசரில் ஜெமினி இன்டகிரேஷன் (Gemini Integration) ஆக்டிவாக இருக்க வேண்டியது அவசியம். அத்துடன் பர்சனல் இன்டெலிஜென்ஸ் ஆப்ஷனும் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இந்த வசதி எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரங்களை கூகுள் நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Chrome Update Autofill Can Now Pull Data Directly from Gmail Using Gemini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X