கூகிள் Chrome பயனர்களுக்கு குட் நியூஸ்.. உங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது..

|

கூகிள் நிறுவனம் தனது டெஸ்க்டாப் Chrome பிரௌசர்களில் சமீபத்திய பாதுகாப்பு இணைப்பு அப்டேட்டை நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய பாதுகாப்பு இணைப்பு அம்சங்கள் பிரௌசரில் மொத்தம் 10 பிழைகளைச் சரிசெய்துள்ளது. மேலும் கூகிள் நிறுவனம் ஜீரோ-டே வள்நெரபிலிட்டி (zero-day vulnerability) பாதிப்புகளையும் சரி செய்துள்ளது என்று அறிவித்துள்ளது.

கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு

இது கூகிளின் அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழு (TAG) கவனித்த இரண்டாவது அச்சுறுத்தல் பிழையாகும். கூகிள் தனது குரோம் பயன்பாட்டை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டாவது பிழைதிருத்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல், பிழையின் விவரங்களைக் கூகிள் வெளியிடாமல் காத்திருக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்றே.

குரோம் செக்யூரிட்டி பாத் வெர்ஷன் 86.0.4240.183

கூகிள் இதுபோன்ற நேரங்களில், பெரும்பாலான Chrome பயனர்கள் அப்டேட்டை நிறுவும் வரை இணைப்புகள் நிறுவனம் வெளிப்படுத்தாது மற்றும் தொடர்புடைய மூன்றாம் தரப்பு லைப்ரரி பாதிப்புகளும் சரி செய்யப்படும் வரை காத்திருக்கும். கூகிள் நிறுவனம் விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸிற்கான குரோம் செக்யூரிட்டி பாத் வெர்ஷன் 86.0.4240.183 ஐ வெளியிடத் தொடங்கியுள்ளது.

பிழையைத் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

கூகிள் குரோம் வெளியிட்டுள்ள வலைப்பதிவில், "விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆகியவற்றிற்கான நிலையான சேனல் 86.0.4240.183 ஆக அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இது வரும் நாட்கள் / வாரங்களில் வெளிவரும். அனைத்து மாற்றங்களின் பட்டியலும் இந்த பதிவில் கிடைக்கிறது. புதிய சிக்கலைக் கண்டறிந்தால், தயவுசெய்து பிழையைத் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

CVE -2016-16009 பற்றிய தகவல்

கூகிளின் கம்யூனிட்டி ஃபோரம் போன்ற தளங்களில் சிக்கல்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளலாம்.கூகிள் மேலும் கூறியது, "CVE -2016-16009 பற்றிய தகவல்கள் கூகிளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்

பாதுகாப்பு பிழைகள் நிலையான நிலையை அடைவதைத் தடுக்க, எண்களின் சேவையை மேம்படுத்தி எங்களுடன் பணியாற்றிய அனைத்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்." என்று கூகிள் நன்றி தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google Chrome receives second security patch with zero-day vulnerability for desktop users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X