Google எச்சரிக்கை! இந்த 6 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்! மீண்டும் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்!

|

வைரஸ், மால்வேர், சைபர் தாக்குதல், உஷார், எச்சரிக்கை என்று தான் இந்த ஆண்டு முழுவதும் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அப்படி இந்த பட்டியலில் தற்பொழுது புதிய மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூகிள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து மீண்டும் புதிதாக 6 மொபைல் ஆப்ஸ்களை ஆபத்தானது என்று அறிவித்து நீக்கம் செய்துள்ளது.

மீண்டும் தாக்குதலை தொடங்கிய ஜோக்கர் மால்வேர்

மீண்டும் தாக்குதலை தொடங்கிய ஜோக்கர் மால்வேர்

கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாக்குதலை நடத்தி வரும் ஜோக்கர் என்ற மால்வேர், தற்பொழுது மீண்டும் தனது கைவரிசையைச் சமீப காலமாகக் காட்டத் துவங்கியுள்ளது. எதிர்பார்த்திடாத பல மொபைல் ஆப்ஸ்களில் தற்பொழுது இந்த ஜோக்கர் மால்வேர் தனது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உடனே அன்-இன்ஸ்டால் செய்ய உத்தரவு

உடனே அன்-இன்ஸ்டால் செய்ய உத்தரவு

இதற்காகக் கூகிள் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உடனே கீழ கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஸ்களை உங்கள் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்து நீக்கிவிடுங்கள்.பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஆண்ட்ராய்டு ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போன்களில் மால்வேரை செலுத்துவதன் மூலம் பயனர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் இந்த மால்வேர் தாக்குதல் நடந்து வருகிறது.

30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!30நாட்களுக்கு இலவச சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ.! மகிழ்ச்சி.!

மீண்டும் 6 ஆப்ஸ்கள் பாதிப்பு

மீண்டும் 6 ஆப்ஸ்கள் பாதிப்பு

ஜோக்கர் மால்வேர் என்ற மோசமான மால்வேர் மூலம் கூகிள் பிளேஸ்டோரில் தற்பொழுது மீண்டும் 6 ஆப்ஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட 6 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களையும் கூகிள் நிறுவனம் அடையாளம் கண்டு அதன் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன்பு 11 ஆப்ஸ் பாதிப்பு

இதற்கு முன்பு 11 ஆப்ஸ் பாதிப்பு

கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் இருக்கும் தடயங்களை உறுதி செய்து தற்பொழுது பாதிக்கப்பட்ட 6 மொபைல் ஆப்ஸ்களையும் தனது கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. கூகிள் நிறுவனம் இதற்கு முன்பும் ஜோக்கர் மால்வேரால் பாதிக்கப்பட்ட 11 ஆப்ஸ்களை கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிள் தீவிரமாக கண்காணிப்பு

கூகிள் தீவிரமாக கண்காணிப்பு

முன்பு ஜூலையில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆப்ஸ்களை கூகிள் நீக்கம் செய்தது, அதற்கும் முன்பு 2017ம் ஆண்டிலிருந்தே, கூகிள் நிறுவனம் ஜோக்கர் மால்வேர் தாக்குதல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மீண்டும் ஜோக்கர் மால்வேர் தன் வேலையை ஆண்ட்ராய்டு பயனர்களிடம் காட்டத் துவங்கியுள்ளது.

40 கிலோ எடை., ஒரே நாளில் பணக்காரர் ஆனா விவசாயி! விண்கல் செய்த மாயம்!40 கிலோ எடை., ஒரே நாளில் பணக்காரர் ஆனா விவசாயி! விண்கல் செய்த மாயம்!

ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 6 ஆப்ஸ்கள்

ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 6 ஆப்ஸ்கள்

பாதுகாப்பு அடிப்படையின் கீழ் பிளே ஸ்டோரில் இருந்து தற்பொழுது மீண்டும் 6 ஆப்களுக்குள் ஜோக்கர் மால்வேர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோக்கர் மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள புதிய 6 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்.

கூகிள் எச்சரித்துள்ளது

கூகிள் எச்சரித்துள்ளது

இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு பயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட, அது உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பட்டியலில் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு, உடனே அவற்றை நீக்கம் செய்யுங்கள் என்று கூகிள் எச்சரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆப்ஸ் பட்டியல்

பாதிக்கப்பட்ட ஆப்ஸ் பட்டியல்

  • சேப்டி ஆப்லாக் (Safety AppLock)
  • கோன்வினியன்ட் ஸ்கேனர் 2 (Convenient Scanner 2)
  • இமோஜி வால்பேப்பர் (Emoji Wallpaper)
  • புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் & எஸ்எம்எஸ் (Push Message - Texting & SMS)
  • பிங்கர் டிப் கேம்பாக்ஸ் (FingerTip Gamebox)
  • செப்பரேட் டாக் ஸ்கேனர் (Separate Doc Scanner)

Best Mobiles in India

English summary
Google Bans Six Apps From The Play Store That Were Affected By The Joker Malware : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X