செய்திகளை வாசிக்கப் போகும் கூகுள் அசிஸ்டென்ட்!
கூகுள் அசிஸ்டென்ட் செயலியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் திறன் என்பது கருவி மற்றும் பல்வேறு காரணிகளை சார்ந்தது.
சமீபத்தில் நடைபெற்ற கூகுள் ஐ/ஓ 2018 மாநாட்டில், அதன் அசிஸ்டென்ட் செயலிற்கு பல்வேறு புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. அப்போதிருந்து அதில் பல்வேறு வசதிகள் செயலியில் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் அசிஸ்டென்ட் ஆண்ராய்டு செயலியில் மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் அசிஸ்டென்ட் ஆண்ராய்டு செயலியில் சேர்க்கப்பட்ட இந்த புதிய அம்சத்தின் வாயிலாக பயனர்கள், கூகுள் நியூஸ் செயலியில் இருந்து நேரிடையாக அசிஸ்டென்ட்-ஐ செய்திகள் படிக்கச் சொல்ல அனுமதிக்கிறது. இதன்மூலம் பயனர்கள் தாங்கள் கேட்கவிரும்பும் செய்திகளை மேலும் குறிப்பாக கேட்க இயலும். அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது ஏதேனும் குறிப்பிட்ட தலைப்புகளில் பயனர்கள் விருப்பத்திற்கேற்ப செய்திகளை கேட்கலாம். "ஹே கூகுள் வாட் இஸ் தி லேடஸ்ட் நியூஸ்" அல்லது "வாட் இஸ் கோயிங் ஆன் இன் சென்னை" என கேட்பதன் மூலம் அது தொடர்பான செய்திகளை அசிஸ்டென்ட் மூலம் கேட்கலாம்.

கூகுள் அசிஸ்டென்ட் செயலியின் பல்வேறு அம்சங்கள் மற்றும் திறன் என்பது கருவி மற்றும் பல்வேறு காரணிகளை சார்ந்தது. அதேநேரம் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே உள்ள கூகுள் அசிஸ்டென்ட், தலைப்புசெய்திகள், வீடியோக்கள் மற்றும் இதர கிளிப்களை டிஸ்ப்ளே செய்யும். கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பல்வேறு வெளியீட்டர்கள் வெளியிட்டுள்ள செய்திகளை அந்த பகுதிக்கு ஏற்ப படிக்கும். பயனர்கள் தங்களின் விருப்பம் மற்றும் தேர்வுக்கு ஏற்ப செய்திகளை கேட்பதற்காக, வெளியீட்டாளர்கள் பட்டியலை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதியானது அனைத்து ஆண்ராய்டு போன்கள், டேப்லெட்கள், ஆண்ராய்டு ஆட்டோ மற்றும் மற்ற கூகுள் அசிஸ்டென்ட் பவர்டு ஸ்மார்ட் டிவைஸ்களில் செயல்படும். தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் இந்த வசதியை, பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுக்க வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Comments
Best Mobiles in India
English summary
Google Assistant can now read stories from News app on Android: Read more about this in Tamil GizBot
Story first
published: Thursday, August 16, 2018, 16:34 [IST]


Click it and Unblock the Notifications