கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகியுள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலி

அசிஸ்டெண்ட் செயலி என்றவுடன் வாய்ஸ் அசிஸ்டெண்ட் என்று கூறப்படும் கூகுள் அசிஸ்டெண்ட் என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம்.

By Siva
|

கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் கூகுள் சமீபத்தில் வெள்யிட்ட பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2XL மாடல் ஸ்மார்ட்போன்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகியுள்ள கூகுள் அசிஸ்டெண்ட் செயலி

அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஹார்ட்வர்ட் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கூகுள் தற்போது அறிமுகம் செய்துள்ள முக்கிய தயாரிப்பு அசிஸ்டெண்ட் செயலி. இது தற்போது பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது

அசிஸ்டெண்ட் செயலி என்றவுடன் வாய்ஸ் அசிஸ்டெண்ட் என்று கூறப்படும் கூகுள் அசிஸ்டெண்ட் என்று தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இந்த செயலி உங்கள் கூகுள் அசிஸ்டெண்ட் செயலி மற்றும் ஓகே கூகுள் கட்டளைகளை செயல்படுத்தும் ஒரு ஷார்ட்-கட் செயலி.

இந்த செயலி உங்கள் போனின் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்றால் அதற்கு உங்கள் போனில் V7.11 வெர்ஷன் தேவை. அதுமட்டுமின்றி இந்த செயலிக்கு தேவையான மெமரியும் உங்கள் போனில் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மேலும் இந்த செயலி இன்ஸ்டால் ஆகும் முன்பே உங்கள் போனுக்கு பொருத்தமானதா? அல்லது இல்லையா? என்பதை உங்களுக்கு தெரிவித்து விடும். இந்த செயலியை இன்ஸ்டால் செய்த பின்னர் அதன் மூலம் ஹோம் ஸ்க்ரீன் மூலம் கூகுள் அசிஸ்டெண்ட்டை மிக வேகமாக இயக்கலாம்

விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி 6சி.!விரைவில் : டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி 6சி.!

மேலும் இந்த செயலி ஏற்கனவே கூகுள் அசிஸ்டெண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள மொபைல் போன்களில் மட்டுமே வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை உங்கள் போனின் இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களுக்கு வேறு எந்தவிதமான அசிஸ்டெண்ட்களும் தேவைப்படாது. கூகுள் அசிஸ்டெண்ட் செயலியை மிக எளிதாக இயக்குவதற்கு இதைவிட வேறு எளிய வழி இல்லை

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழாவின் போது கூகுள் கூகுள் அசிஸ்டெண்ட் செயலியின் வேறு எந்தவிதமான செயல்பாடுகள் குறித்தும் புதிய அறிவிப்புகளை தெரிவிக்கவில்லை. குறிப்பாக பரிவர்த்தனை குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
The Google Assistant app has been launched on the Play Store and works well with the supported Android devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X