இந்தியா : கூகுள் நிறுவனத்தின் ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம்.!

By Prakash
|

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தவருகிறது, அதன்படி தற்சமயம் இந்தியாவில் கூகுள் நிறுவனம் ஆர்ட்ஸ் & கல்ச்சர் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் உள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் உலகின் அழகிய மற்றும் பிரபல ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் சார்ந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி இந்தியாவில் பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆர்ட்ஸ் ரூ கல்ச்சர் செயலி.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

அட்டகாசமான ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி பொறுத்தவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும்
எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செல்பீ :

செல்பீ :

இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியின் சிறப்பம்சம் பொறுத்தவரை நீங்கள் ஒரு செல்பீ எடுத்தால் அதில் உள்ள முகத்தைப் போல இருக்கும் ஒவியம் தேடித்தரும் வசதி இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செல்பீயில் உள்ள முகத்தின் சாயலில் இருக்கும் அந்த ஒவியம்.

 கம்ப்யூட்டர் விஷன் :

கம்ப்யூட்டர் விஷன் :

ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியில் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, இதனால் தான் வாடிக்கையாளர்களின் செல்பீ புகைப்படங்களை உலகம் முழுக்க சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட்களுடன் ஒற்றுபோகும் புகைப்படங்களை காண்பிக்கும் திறமை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா:

அமெரிக்கா:

இந்த புதிய செயலி முதலில் அமெரிக்காவில் தான் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்தயாவிலும் இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

 மூன்று கோடி:

மூன்று கோடி:

இதுவரை இந்த ஆர்ட்ஸ் & கல்ச்சர் செயலியை மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தியுள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது இந்த புதிய செயலி.

 ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள்:

ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள்:

1500 அருங்காட்சியகங்களில் 6000க்கும் அதிகமான கண்காட்சிகளில் உள்ள ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை என மொத்தம் பல லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் இந்த செயலியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Art Culture Apps Selfie Matching Feature Comes to India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X