நீங்கள் இதுவரை கேள்விப்படாத கூகுளின் 5 ஆண்ட்ராய்ட் செயலிகள்

By Siva
|

உலகில் பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் தான். பயன்படுத்துவதற்கு எளிதானது மற்றும் கூகுளின் ஆயிரக்கணக்கான செயல்கள் சப்போர்ட் செய்யும் என்பதால் அனைவரும் இந்த வகை போன்களை விரும்பி வாங்குகின்றனர்.

நீங்கள் இதுவரை கேள்விப்படாத கூகுளின் 5 ஆண்ட்ராய்ட் செயலிகள்

கூகுள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு செயலியும் ஒவ்வொரு விதத்தில் பயன்படும் என்பதால் எதை பயன்படுத்துவது எதை தள்ளிவிடுவது என்று ஒரு மனப்போராட்டமே நடக்கும்.

இந்த நிலையில் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஐந்து ஆண்ட்ராய்ட் செயலிகள் குறித்து தற்போது பார்ப்போம்

வால்பேப்பர்:

வால்பேப்பர்:

வால்பேப்பர் என்றாலே பிடிக்காதவர்கள் உலகில் யாராவது உண்டா? அதிலும் கூகுளில் வால்பேப்பர் என்றால் சொல்லவும் வேண்டுமோ. இந்த செயலியில் படங்கள் முதல் டெக்ஸ்ட்கள் வரை ஏராளமான வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கின்றன.

குறிப்பாக எர்த் என்ற தலைப்பில் உள்ள பகுதியில் சாட்டிலைட்டில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்கள் ஆச்சரியத்தை வரவழைக்கும். இந்த வகை வால்பேப்பர்களை தினமும் ஒன்றாக பயன்படுத்தினால் அதன் திருப்தியே தனிதான்

போட்டோஸ்கேன்:

போட்டோஸ்கேன்:

உங்களுக்கு தேவையான, பிடித்த புகைப்படங்களை இந்த செயலி மூலம் ஸ்கேன் செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்து கொள்லலாம். போன் கேமிராவின் மூலம் போட்டோவை ஸ்கேன் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் பழைய புகைப்படங்களை புதிய படங்கள் போல மாற்றுவது மட்டுமின்றி மங்கலான படங்களையும் பளிச்சென மின்னும் வகையிலும், மாற்றலாம் என்பதே இந்த செயலியின் சிறப்பு

கூகுள் டிரிப்:

கூகுள் டிரிப்:

ஏற்கனவே பல செயலிகள் சுற்றுலா பயணிகளுக்கு உதவி செய்து வரும் நிலையில் கூகுளின் இந்த செயலி மிகவும் பயனுள்ள ஒரு செயலி. சுற்றுலாவை மிக எளிதாக்கும் இந்த செயலியை நீங்கள் ஆப்லைனிலும் பயன்படுத்தி கொள்ளலாம். அருகில் இருக்கும் சுற்றுலா இடங்கள், சுற்றுலாவை திட்டமிடல் மற்றும் முன்பதிவு உள்பட சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து விபரங்களும் இந்த செயலியில் கிடைக்கும்

அறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).!அறிமுகம் : விவோ எக்ஸ்0 மற்றும் எக்ஸ்20 பிளஸ் (விலை & அம்சங்கள்).!

 கூகுள் ஃபிட்:

கூகுள் ஃபிட்:

இந்த செயலி ஆரம்பத்தில் அனைத்து போன்களிலும் இன்ஸ்டால் செயய்ப்பட்டு இருந்தது. இந்த செயலி உங்கள் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டும். இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பாலினம், எடை மற்றும் உயரம் குறித்த தகவல்களை சரியாக நிரப்பினால் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தூரம் நடக்கின்றோம் ,உடலுக்கு தேவையான உடற்பயிற்சி நேரம், கலோரி அளவு உள்ளிட்டவற்றை துள்ளியமாக கணக்கிட்டு காட்டும். எனவே வீட்டுக்குள்ளே ஒரு ஜிம் இருப்பதை போன்று உணரலாம்

கூகுள் ஒபினியன் ரிவார்ட்ஸ்:

கூகுள் ஒபினியன் ரிவார்ட்ஸ்:

கூகுள் நிறுவனத்தின் இந்த செயலியை டவுன்லோடு செய்தால் நமக்கு வருமானமும் கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்.

இந்த ஒபினியன் ரிவார்ட் செயலியில் இருக்கும் சர்வேக்களுக்கு நாம் பதிலளித்தால் போதும், கூகுள் நம்முடைய அக்கவுண்டில் ஒரு தொகையை கொடுக்கும். இந்த தொகையை பெய்டு செயலிகள், கேம்ஸ்கள் மற்றும் சிலவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலே கூறிய இந்த ஐந்து செயலிகளும் உங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்

Best Mobiles in India

Read more about:
English summary
If you want to know about best Google apps of 2017, Then these are some examples were you will get lots of user friendly feature in this apps. These apps are free and very useful to make your life easier.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X