Home
Apps

Google மன்னிப்பு: சில பயனர்களின் வீடியோகளை அந்நியர்கள் டவுன்லோட் செய்திருக்கலாம்!

கூகிள் போட்டோஸ் பயன்படுத்தும் சில பயனர்களின் தனிப்பட்ட வீடியோக்களை, தற்செயலாக அந்நியர்கள் பதிவிறக்கம் செய்து மாற்றி அனுப்பியதற்காகக் கூகிள் செவ்வாய்க்கிழமை அன்று மன்னிப்பு கோரியுள்ளது. நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் மட்டும் இந்த பக் இருந்துள்ளதாகக் கூகிள் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அதற்கான அடிப்படை சிக்கலைச் சரிசெய்ததாக நிறுவனம் கூறியுள்ளது.

கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் சிக்கல்

கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் சிக்கல்

கூகிள் போட்டோஸ் பயன்பாட்டை பயன்படுத்தும் பல பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோகளை கூகிள் போட்டோஸ் பேக்கப்-ல் ஸ்டோரேஜ் செய்து வைத்துள்ளனர். கூகிள் நிறுவனம் அண்மையில் கூகிள் டேக்அவுட் என்ற புதிய சேவையைக் கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் அறிமுகம் செய்தது.

அந்நியர்களுக்கு அனுமதி வழங்கிய கூகிள் டேக்அவுட்

அந்நியர்களுக்கு அனுமதி வழங்கிய கூகிள் டேக்அவுட்

பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை காப்பி செய்து ஸ்டோரேஜ் செய்துகொள்வதற்கான அனுமதியை இந்த கூகிள் டேக்அவுட் சேவை வழங்கியது. நவம்பர் 21 முதல் நவம்பர் 25 வரை கூகிள் டேக்அவுட்டைப் பயன்படுத்திய நபர்களில் சில நபர்களுக்கு அந்நியர்களின் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்நியர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்

அந்நியர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம்

அல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகிள் நிறுவனம், சில பயனர்களின் வீடியோக்களை அந்நியர்கள் பதிவிறக்கம் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளது. ஒரு சில பயனர்களின் வீடியோகளை மட்டும் அந்நியர்களுக்குப் பதிவிறக்கம் செய்யக் கிடைத்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

பேக்கப் புகைப்படங்கள் பாதுகாப்பாக உள்ளதா?

பேக்கப் புகைப்படங்கள் பாதுகாப்பாக உள்ளதா?

அவர்களின் பேக்கப் புகைப்படங்கள் பாதுகாப்பாகத் தான் இருந்துள்ளது என்றும், அடிப்படை சிக்கலைக் கண்டறிந்து நாங்கள் சரிசெய்துவிட்டோம், இந்த நிகழ்ந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.

எத்தனை பயனர்களின் தரவுகள் டவுன்லோட் செய்யப்பட்டது?

எத்தனை பயனர்களின் தரவுகள் டவுன்லோட் செய்யப்பட்டது?

கூகிள் தெரிவித்துள்ள அந்தக் குறிப்பிட்ட காலத்தில், தரவை எக்ஸ்போர்ட் செய்தவர்களில் 0.01%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூகிள் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. உண்மையில் எத்தனை பயனர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த செய்தியை முதலில் 9to5Google அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிள் டேக்அவுட் உண்மையில் என்ன செய்யும்?

கூகிள் டேக்அவுட் உண்மையில் என்ன செய்யும்?

கூகிள் போன்ற நிறுவனங்கள் பயனர்களுக்குக் கூடுதல் தனியுரிமை அம்சங்களை வழங்குவதன் மூலம் எதிர்கொள்ளும் சில சிக்கல்களை நிலைமை காட்டுகிறது. கூகிள் டேக்அவுட் என்பது கூகிளில் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் தரவுகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் ஒரு அம்சமாகும், மேலும் அவர்களின் எல்லா தரவையும் பதிவிறக்கம் செய்யத் தனிப்பட்ட முறையில் அனுமதிக்கிறது.

எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பிய கூகிள்

எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பிய கூகிள்

கூகிள் போட்டோஸ் இல் உள்ள சில வீடியோக்கள் தொடர்பில்லாத பயனர்களின் காப்பகங்களுக்கு(archives) தவறாக ஏற்றுமதி செய்யப்பட்டன என்றும் உங்கள் கூகிள் போட்டோஸ் கணக்கில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்கள் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், சிலர் தங்களுடையதல்லாத வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்திருக்கலாம் என்றும் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

சரி செய்யப்பட்ட சிக்கல்

சரி செய்யப்பட்ட சிக்கல்

இந்த மின்னஞ்சலைப் பெற்ற பயனர் எவரும் மீண்டும் தங்களுக்குச் சொந்தமில்லாத தரவை எக்ஸ்போர்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும், தங்கள் பிரைவேட் கிளவுட்டிற்கு சொந்தமான தரவுகளை மட்டும் பதிவிறக்கம் செய்ய மீண்டும் முயற்சிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Google apologized for accidentally sending some users private videos to strangers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X