Home
Apps

1.5 மில்லியன் பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை! உடனே டெலீட் செய்யுங்கள்!

கூகுள் நிறுவனம், சுமார் 1.5 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியைக் வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு புதிய மால்வேர் செயலிகளின் பெயர்களைக் கூகுள் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஆபத்தான இந்த இரண்டு ஆப்-கள், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுரித்தியுள்ளது. உஷார் ஆகிக்கொள்ளுங்கள்.

64 மால்வேர் ஆப்களை நீக்கம் செய்த கூகுள்

64 மால்வேர் ஆப்களை நீக்கம் செய்த கூகுள்

ஆபத்தான அப்ஸ் (Dangerous Apps) என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் சென்ற வாரம் வரை சுமார் 64 மால்வேர் செயலிகளைத் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 64 மால்வேர் ஆப்-களை தொடர்ந்து, தற்பொழுது மீண்டும் இரண்டு புதிய ஆப்களின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் நிறுவனம் சேர்த்து, அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

இரண்டு புதிய மால்வேர் ஆப்

இரண்டு புதிய மால்வேர் ஆப்

சன் ப்ரோ பியூட்டி கேமரா (Sun Pro Beauty Camera) மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா (Funny Sweet Beauty Selfie Camera) என்ற இந்த இரண்டு ஆப்-களை தான் கூகுள் நிறுவனம் தற்பொழுது ஆபத்தான ஆப்ஸ்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த செயலியை இது வரை சுமார் 1.5 மில்லியன் பயனர்கள் டவுன்லோட் செய்துள்ளனர் என்பது தான்.

வீணாய்ப் போகும் ஸ்மார்ட்போன் பேட்டரி

வீணாய்ப் போகும் ஸ்மார்ட்போன் பேட்டரி

இந்த இரண்டு ஆபத்தான ஆப்ஸ்களும், பயனர்களின் ஸ்மார்ட்போனில் தேவையில்லாத பாப்-அப் விளம்பரங்களை வழங்குவதுடன், அதைப் பயனரின் கவனத்திற்குத் தெரியாமல், பேக்கிரவுண்டில் ரன் ஆகும்படி செய்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் பேட்டரி வேகமாக வீணாய்ப் போகிறதென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனே அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்

உடனே அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்

இத்துடன், இந்த சன் ப்ரோ பியூட்டி கேமரா மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா ஆகிய இரண்டு செயலிகளும், ஸ்மார்ட்போன் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களை உடனே இந்த அப்ஸ்களை அவர்களின் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்யச் சொல்லித் வலியுரித்தியுள்ளது.

கூடுதல் சந்தேகம்

கூடுதல் சந்தேகம்

கூடுதலாக இந்த இரண்டு செயலிகளும் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ ரெகார்டிங் சேவைக்கான அனுமதியையும் கேட்டுள்ளது. இது தற்பொழுது மீண்டும் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மொபைல் பாதுகாப்பு நிறுவனம் வாண்டரா தெரிவித்துள்ளது. வாண்டரா நிறுவனம் தான் இந்த செயலிகளில் மால்வேர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.

24 மால்வேர் ஆப்ஸ்கள்

24 மால்வேர் ஆப்ஸ்கள்

ஆபத்தான கேம்ஸ்கேனர்(CamScanner)

ஆபத்தான கேம்ஸ்கேனர்(CamScanner)

அதற்கும் முன்பு, கேம்ஸ்கேனர்(CamScanner) என்றழைக்கப்படும் பிரபலமான ஆப்-ஐ கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்தது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

உடனே உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

உடனே உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 66 செயலிகளில் ஏதேனும் ஒரு செயலி, உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தாலும் கூட ஆபத்து தான் என்பதை உணர்ந்து, உடனே அன்-இன்ஸ்டால் செய்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Google Alerts 1.5 Million Users To Delete These Apps Right Away : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X