கூகுள் அலோ செயலியில் உள்ள புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?

Written By:

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் படைப்புகளின் அப்டேட்டை கொடுத்து வரும் நிலையில் தற்போது அலோ மெசேஜ் செயலியில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் நேரடியாக கூகுள் டியோ வீடியோ கால் வசதியை அலோ சாட் மூலமே பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

கூகுள் அலோ செயலியில் உள்ள புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் உங்கள் நண்பருடன் மெசேஜ் மூலம் சாட்டிங் செய்து கொண்டிருக்கும்போதே உங்கள் மொபைலின் வலது ஓரத்தில் கூகுள் டியோவின் ஐகான் தெரியும். அந்த ஐகானை டேப் செய்வதன் மூலம் நீங்கள் உடனடியாக கூகுள் டியோ செயலியை பெற்று கொள்ளலம். இதன் முக்கிய பலன் என்னவெனில் டைப் செய்து ஒருவரிடம் சாட் செய்து கொண்டிருக்கும்போது திடீரென டியோ கால் வந்தால், உடனடியாக அந்த காலுக்கு மாறலாம்,.

இந்த புதிய வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் மால் ஒன்றில் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும்போது திடீரென கால் வந்தால் உடனடியாக நீங்கள் டைப் அடிக்கும் சாட்டில் இருந்து டியோ காலுக்கு மாறி எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இவ்வாறு ஒன்றிலிந்து இன்னொன்றில் எளிதாக மாறும் இந்த புதிய வசதியை பெறுவதற்கு உங்கள் போனிலும் நீங்கள் சாட் செய்து கொண்டிருக்கும் உங்களுடைய நண்பர் போனிலும் அலோ செயலி மற்றும் டியோ செயலி என இரண்டும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்கள் போனில் டியோ செயலி இல்லை என்றால் உங்களுக்கு அதை இன்ஸ்டால் செய்யும்படி ஒரு பாப்-அப் தோன்றும், அதேபோல் உங்கள் நண்பரின் போனில் இல்லையென்றால் அவரை இன்வைட் செய்யும்படி கேட்டு உங்களுக்கு ஒரு பாப்-அப் தோன்றும்

மேலும் இந்த புதிய வசதியை நீங்கள் வைஃபையில் இருந்து பயன்படுத்தவில்லை என்றால் உங்கல் போனில் உள்ள டேட்டா செலவாகும் என்பதையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

மேலும் வீடியோகால் வசதி மட்டுமின்றி அலோ செயலியில் மேலும் ஒரு புதிய வசதியாக நீங்கள் சாட் செய்து கொண்டிருக்கும்போது அதில் புதியதாக ஸ்டிக்கர்கள் மற்றும் போட்டோக்களை அனுப்பும் வசதியையும் தற்போது நீங்கள் பெறலாம். நீங்களும் உங்கள் நண்பரும் இணைந்து எடுத்திருந்த பழைய பள்ளி மற்றும் கல்லூரி போட்டோக்களை அலோ செயலி மூலம் பகிர்ந்து கொண்டு மலரும் நினைவுகளை அசைபோடலாம்.

மேலும் இந்த புதிய வசதியை பெறுவதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன் வைத்திருப்பவர்கள் லேட்டஸ்ட் வெர்ஷன் அலோ செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.Read more about:
English summary
Google is now rolling out an update for its Allo messaging app.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot