உலகளவில் Gmail செயலிழப்பு! மெயில் அனுப்ப முடியவில்லை என்று புகார் - கூகிள் கூறிய பதில் இதுதான்!

|

கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் உலகளவில் தற்பொழுது செயல்படவில்லை, பல பயனர்களால் அவர்களின் ஜிமெயில் அக்கௌன்ட்டை லாகின் செய்ய முடியவில்லை என்றும், இன்னும் சிலர் மின்னஞ்சல்களை அனுப்பவோ அல்லது அதில் கோப்புகளை இணைக்கவோ முடியவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இந்த எதிர்பாராத கோளாறு பற்றி கூகிள் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

உலகளவில் ஜிமெயில் செயல்படவில்லை

உலகளவில் ஜிமெயில் செயல்படவில்லை

உலகளவில் ஜிமெயில் தற்பொழுது செயல்படாமல் இருப்பதினால் பயனர்கள் தங்களின் புகார்களை சமூக ஊடக தளங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மின்னஞ்சல்களை அனுப்ப முடியவில்லை மற்றும் மின்னஞ்சல்களில் கோப்புகளை இணைக்க முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் ஒரு ஆவணத்தை இணைக்க முயன்றபோது ஜிமெயில் தெரிவித்த பிழை நோட்டிபிகேஷன் தகவலையும் ஸ்கிரீன் ஷாட்டாக பதிவு செய்து வருகின்றனர்.

Google பயன்பாடுகளின் நிலை பக்கம்

Google பயன்பாடுகளின் நிலை பக்கம்

ஜிமெயில் தொடர்பான சிக்கல்களின் அறிக்கைகள் தங்களுக்குக் கிடைத்தன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் Google பயன்பாடுகளின் நிலை பக்கமும் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் டிவிட்டர் மற்றும் டவுன்டெக்டர் வலைத்தளத்தின் வழியாக அவர்கள் சந்திக்கும் கோளாறுகளையும், சிக்கல்களையும் பதிவிட்டு விவாதம் செய்து வருகின்றனர். கூகிளின் சேவைகளில், குறிப்பாக ஜிமெயில், உலகளவில் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது இந்த காரணங்களுக்கு இ-பாஸ் கிடைக்கும்! எப்படி சரியாக விண்ணப்பிப்பது?இப்போது இந்த காரணங்களுக்கு இ-பாஸ் கிடைக்கும்! எப்படி சரியாக விண்ணப்பிப்பது?

கூகிள் சொன்ன பதில்

கூகிள் சொன்ன பதில்

இதனால், உலகளவில் உள்ள பல மில்லியன் ஜிமெயில் பயனர்கள் தற்பொழுது சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கூகிள் குறிப்பிட்டது, "ஜிமெயிலுடன் உருவாகியுள்ள இந்த சிக்கல் குறித்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் தகவல்களை விரைவில் உங்களுக்கு வழங்குவோம்." என்று கூகிள் தனது சார்பில் தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக கோளாறை

இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக கோளாறை

இருப்பினும் என்ன காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை.இரண்டு மாதங்களில் ஜிமெயில் இவ்வளவு பெரிய செயலிழப்பைச் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிமெயில் சேவைகள் சில மணிநேரங்களுக்குத் துண்டிக்கப்பட்டது.

அமேசானில் பவர்பேங்க் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட்.!அமேசானில் பவர்பேங்க் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த மிகப்பெரிய கிஃப்ட்.!

புகார்

புகார்

கூகிள் பயனர்கள் இந்தியாவில் ஒரு மோசமான நேரத்தை அந்த தருணத்தில் சந்தித்தனர். இந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் உள்ள பயனர்கள் ஜிமெயில் மற்றும் பிற கூகிள் சேவைகளை அணுக முடியவில்லை என்று புகார் அளிக்க இப்பொழுது கூறி சமூக ஊடகங்களுக்குச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Gmail not Working Today: Message Could not be senton Gmail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X