ஐ ஓ.எஸ்-ல் ஜிமெயில் பெற்ற 'ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப்' வசதி! ஆண்ராய்டில் எப்போது?

தற்போது ஜிமெயில் மொபைல் ஆப் ல் கடைசியாக ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப் வசதியை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது கூகுள்.

|

கூகுளின் மின்னஞ்சல் சேவை வழங்கும் தளமான ஜிமெயில் தனது மறுசீரமைப்பை சமீபத்தில் பெற்றுள்ளது. முற்றிலும் புதிய வசதிகளுடன் கூடிய தொகுப்பை ஜிமெயிலுக்காக வெளியிட்டுள்ளது கூகுள். புதுமையான மாறுபட்ட வடிவமைப்புடன், இந்த அப்டேட்டில் புதிய வசதிகளின் தொகுப்பு மற்றும் சேவைகளின் செய்லபாடுகளை வழங்கியுள்ளது ஜிமெயில். இந்த அப்டேட் மூலம் வடிவமைப்பில் புதிய கூறுகளையும் சேர்த்துள்ளது ஜிமெயில்.

ஐ ஓ.எஸ்-ல் ஜிமெயில் பெற்ற 'ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப்' வசதி!

கூகுள் நிறுவனம் மேலும் கூறுகையில், இந்த மறுவடிவமைப்பில் ஸ்மார்ட் ரிப்ளே, கான்பிடென்சியல் மோட், நட்ஜிங், நேடிவ் ஆப்லைன் சப்போர்ட் மற்றும் சில வசதிகளை ஜிமெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளில் கான்பிடென்சியல் மோட், நட்ஜிங், ஸ்மார்ட் இன்பாக்ஸ் போன்ற சில வசதிகள் கடந்த சில வாரங்களாகவே ஜிமெயிலில் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது ஜிமெயில் மொபைல் ஆப் ல் கடைசியாக ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப் வசதியை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது கூகுள். ஐ ஓ.எஸ்-ல் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த வசதியானது வெகுவிரைவில் ஆண்ராய்டு கருவிகளிலும் வெளியாகவுள்ளது.

ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப் வசதியின் மூலம் ஈமெயில்களை நுண்ணறிவுடன் வகைப்படுத்தவும், பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப யாரிடம் இருந்து வரும் மெயிலையும் அன்-சப்ஸ்கிரைப் செய்ய முடியும். மேலும் இந்த புதிய வசதியின் மூலம் பயனர்களுக்கு நியூஸ்லெட்டரும் பரிந்துரைசெய்யப்படும். இதில் நீண்ட காலத்திற்கு திறக்கப்படாமல் இருக்கும் நியூஸ்லெட்டர்களையும், இன்பாக்ஸ்-ல் அதிக காலம் உள்ளவற்றையும் அன்-சப்ஸ்கிரைப் செய்யும் வசதியும் உள்ளது. இந்த அம்சங்களின் மூலம் பயனர்கள் சிறந்த முறையில் ஈமெயில்களை மேலாண்மை செய்யவும், புதிய ஜிமெயில் அனுபவத்தை பெற முடியும் எனவும் கூகுள் நம்புகிறது.

ஐ ஓ.எஸ்-ல் ஜிமெயில் பெற்ற 'ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப்' வசதி!

ஜிமெயில் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவனம் என ஒத்துக்கொள்கிறோம். இந்த ஈமெயில் சேவை தனிப்பட்ட பயனர்களுக்கும் , பெருநிறுவனங்களுக்கும் இன்றியமையாதது. ஜிமெயிலில் இந்த புதிய அப்டேட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிமுகம் மூலம் பயனர்கள் சிறப்பான அனுபவத்தை பெறமுடியும்.

முன்னர் கூறியபடி, இந்த ஸ்மார்ட் அன்-சப்ஸ்கிரைப் வசதி ஐ ஓ.எஸ்-ல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் வெகுவிரைவில் ஆண்ராய்டு கருவிகளிலும் வெளியாகவுள்ளது.தனது பயனர்களுக்காக கூகுள் வேறு என்னென்ன புதுமையான வசதிகளை தரப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
Gmail for iOS gets ‘Smart Unsubscribe’ feature, Android to receive soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X