கிளான்ஸ் லாக் ஸ்கிரீன் வசதியுடன் கலக்கும் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் அன்மையில் ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதி அடிப்படையில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்னவென்றால், கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

குறிப்பாக கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.29,999-விலையில் அருமையாக கேமரா மற்றும் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன்களை விட கேலக்ஸி ஏ50 சாதனம் கவர்ச்சியான வடிவமைப்புடன், மேம்படுத்தப்பட்ட டிஸ்பிளே மற்றும் கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் அனைத்துவிதமான தவல்களையும் உள்ளடக்கிய சிறந்த ஸ்கிரீன் லாக் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ50. இந்த ஸ்கிரீன் லாக் பெயர் என்னவென்றால் கிளான்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிளான்ஸ் ஆப் வசதி உங்கள் லாக் ஸ்கிரீனை ஒரு தனித்துவமான மற்றும் அழகான அனுபவமாக மாற்றுகிறது.

குறிப்பாக ஸ்மார்ட்போனில் எந்த பயன்பாடுகள் மூலம் தேடாமல் அல்லது உங்கள் செல்போனை திறக்காமல் நீங்கள் விரும்பும் உள்ளக்கத்தை காண இந்த கிளான்ஸ் வசதி மிகவும் அருமையாக உதவுகிறது. மேலும் இந்த கிளான்ஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஒரு அதிர்ச்சியூட்டும் படத்துடன் ஒரு குறுகிய தலைப்பைக் காணலாம்.
இந்த கிளான்ஸ் ஆப் பொதுவாக எப்படி செயல்படுகிறது என்றால் நீங்கள் ஸ்கிரீன் லாக் செய்தபோதிலும் ஒரு கதையை பற்றிய அறியலாம், அதற்கு நீங்கள் கீழே ஸ்வைப் செய்தாலே போதும். மேலும் இது வீடியோ வடிவிலும் இருப்பதால்
பயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.

இந்த கிளான்ஸ் லாக் ஸ்கிரீன் பொதுவாக உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுவரலாம், அதாவது இதில் உள்ள செட்டிங்ஸ் வழியோ சென்று உங்களுக்கு பிடித்தமான உள்ளடக்கங்களை தேர்வு செய்யமுடியும். உதரணமாக பயணங்கள், உணவு, ஃபேஷன், விளையாட்டு மற்றும் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தேர்வு செய்ய முடியும். பின்பு கிளான்ஸ் டிவி,கருத்துக் கணிப்புகள், உள்ளிட்ட அருமையாகஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் இந்த கிளான்ஸ் லாக் ஸ்கரீனில் இருந்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை உங்கள் கேலரியில் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இவ்வாறு லாக் ஸ்கிரீனில் அனைத்து விதமான வசதியையும் பயன்படுத்தும் போது பேட்டரி ஆயுள் குறையாது மற்றும் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளான்ஸ் ஆப் வசதி ஸ்மார்டபோனுக்கு சிறந்த உள்ளடக்கம் மற்றும் எளிமையான அணுகலை தருகிறது. ஒவ்வொரு முறையும் உங்கள் ஸ்மார்ட்போனை எடுக்கும்போது, சுவாரஸ்யமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒன்றைக் காணமுடியும். கிளான்ஸ் நாள் முழுவதும் அருமையான தருணங்களை உருவாக்குகிறது. மேலும் இந்த கிளாஸ் லாக் ஸ்கிரீன் வசதி ஏ50 ஸ்மார்ட்போன் மற்றும் எம்,ஜே மற்றும் பிற சிரீஸ் மாடல்களிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications