விரைவில் வாட்ஸ்அப்-ல் கிடைக்கும் புதிய அம்சங்கள்.! என்னென்ன?
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் வரும் 2021-ம் ஆண்டிலும் இந்நிறுவனம் பல்வேறு அம்சஙகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக வரும் 2021-க்குள் நுழைந்தவுடன் வாட்ஸ்அப்-ல் நாம் காணக்கூடிய மூன்று முக்கிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

தனியுரிமைக் கொள்கை
வெளிவந்த தகவலின்படி வாட்ஸ்அப் பயனர்கள் 2021-ம் ஆண்டில் வரும் புதிய விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் இதைச் செய்யத் தவறினால், வெளியான அறிக்கைகளின்படி, உங்களது அக்கவுண்ட்டை நீங்கள் டெலிட் செய்ய வேண்டியிருக்கும்.
மேலும் வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்களை கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo ஆல் கண்டறியப்பட்டபடி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான இந்நிறுவனம் பிப்ரவரி 8 முதல் தங்கள் சேவை விதிமுறைகளை புதிப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே வாட்ஸ்அப் பயனர்கள் புதிய தனியுரிமை விதிகளை ஏற்க விரும்பவில்லை என்றால், அவர்கள் தங்களது அக்கவுண்ட்டை நீக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்க்டாப் அப்டேட்
வாட்ஸ்அப் வெப் வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு அடுத்த ஆண்டு பல அட்டகாச அம்சங்கள் கிடைக்கும். மேலும் கூடிய விரைவில் வாட்ஸ்அப் வெப் வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ காலிங் அம்சம் இணைக்கப்படவுள்ளது.
பயனர்கள் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய அல்லது பெற அனுமதிக்கும் அம்சங்கள் வாட்ஸ்அப் வெர்ஷனில் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வெளிவந்த WABetaInfo-வின் அறிக்கையின்படி, ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சம் இப்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயன்பாட்டிற்கு மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கினறன். ஆனால் இது இப்போது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வெளியீடாகவேத் தெரிகிறது. மேலும் குறிப்பிட்ட அம்சங்கள் சார்ந்த பட்டன்களில் பீட்டா லேபிள்கள் காட்சிப்படுகின்றன.
அடுத்த ஆண்டுக்குள் நாம் நுழையும்போது வாட்ஸ்அப்-ன் அனைத்து வெப் வெர்ஷன் பயனர்களுக்கும் இந்த அம்சத்தினை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

மல்டிபிள் இமேஜ்கள் மற்றும் வீடியோக்கள்
குறிப்பாக ஐஓஎஸ் 2.21.10.23 க்கான வாட்ஸ்அப் பீட்டா புதிய ஆண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் பீட்டா பதிப்பாகும். இந்த புதிய அப்டேட் இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப்பில் பேஸ்ட் செய்வதற்கான வசதியைக் கொண்டுவருகிறது என WABetaInfo தளம் கூறியுள்ளது.
WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, வாடிக்கையாளர்கள் போட்டோஸ் ஆப்பில் இருந்து பல படங்களை தேர்வுசெய்து, எக்ஸ்போர்ட் மற்றும் காப்பி செய்ய முடியும். பின்னர் வாட்ஸ்அப்பை திறந்து தேவையான சாட்டில் வெறுமனே பேஸ்ட் செய்தால் போதும், எல்லா படங்களும் வாட்ஸ்அப் வழியாக சென்ட் செய்ய தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications