டேட்டிங் ஆப் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றிய ஜோடி.!

இந்த ஜோடிகள் ரூ1000க்கு மேல் கேட்காததால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கடந்த 10 மாதங்களாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை என்கிறார் இணை போலிஸ் கமிஷனர் சின்மோய் பிஸ்வால்.

|

டேட்டிங் ஆப்-ல் போலி கணக்குகளை துவங்கி, அதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் ரூ500-ரூ1000 வரை ஏமாற்றிய ஜோடியை பல மாத தேடுதலுக்கு பிறகு கடந்த ஞாயிறன்று காவல்துறை கைது செய்துள்ளது. இந்த ஜோடிகள் ரூ1000க்கு மேல் கேட்காததால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கடந்த 10 மாதங்களாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை என்கிறார் இணை போலிஸ் கமிஷனர் சின்மோய் பிஸ்வால்.

டேட்டிங் ஆப் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றிய ஜோடி.!

காவல்நிலையத்தில் புகார் அளித்தால் சமூகத்தில் தங்களின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என பாதிக்கப்பட்டவர்கள் கருதினர். ரூ500,ரூ1000 என மிகக்குறைந்த அளவு பணமே இழப்பு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் புகார் அளிக்க தயங்குகின்றனர் என்கிறார் பிஸ்வால்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

சந்தேகத்திற்கிடமான அந்த ஜோடியை கண்டறிந்த காவல்துறை, அந்த ஆண் 29வயதான வேலையில்லாத சிரஞ்சீவி என்பவர் என்றும், 19வயதான அந்த பெண்ணைப் பற்றிய தகவல்கள் வெளியிடவும் மறுத்துவிட்டது.அந்த பெண் தினமும் இளைஞர்களை தனது வலையில் வீழ்த்துவதற்கு சம்பளமாக ரூ600ஐ சிரஞ்சீவி வழங்கி வந்துள்ளார்

11 சிம் கார்டுகள்

11 சிம் கார்டுகள்

வலையில் விழும் இளைஞர்களிடம் இருந்து பணத்தை பெற இ-வாலட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது அந்த ஜோடி. இ-வாலட்களுடன் இணைந்த வங்கி கணக்குகளை போலி ஆவணங்கள் பயன்படுத்தி துவங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்கள் மற்றும் 11 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

கடந்த மாதம் ஒரு பெண் அமர் காலணி காவல் நிலையத்திற்கு சென்று ஒரு டேட்டிங் ஆப்-ல் தனது புகைப்படத்தை அனுமதியின்றி தவறாக பயன்படுத்துவதாக புகார் அளித்த பின்னரே இந்த குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது." அந்த பெண்ணிற்கு தெரிந்தவர் ஒருவர் இதைப்பற்றி எச்சரித்துள்ளனர். பின்னர் அப்பெண் அக்கணக்கின் உரிமையாளரை தொடர்பு கொண்டு தனது புகைப்படத்தை நீக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிரஞ்சீவி அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் , அவரை பயமுறுத்தவும் செய்தார் என்கிறார் கமிஷனர்.

 காவல்துறை

காவல்துறை

உடனே காவல்துறை புகார் பதிவுசெய்ததுடன், அந்த கணக்கை நன்றாக ஆராய்ந்து குற்றவாளிகளை கண்டறிய அனைத்து வழிகளிலும் முயன்றனர். அந்த டேட்டிங் ஆப் கணக்கில் வழங்கப்பட்டிருந்த மொபைல் எண் தான் திருப்புமுனையாக இருந்தது. அதன் மூலம் கடந்த வாரம் சிரஞ்சீவியை கைது செய்த காவல்துறை, அவர் மூலம் பெண் நண்பரையும் பிடித்தது. கடந்த ஆண்டு டெல்லியின் புறநகர் பகுதியில், அந்த பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார் சிரஞ்சீவி. இளைஞர்களை வீழ்த்துவதற்கு பெண் குரல் தேவைப்பட்டதால், இந்த பெண்ணுக்கு தின சம்பளம் அளித்து போன் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

டேட்டிங் ஆப்

டேட்டிங் ஆப்

டேட்டிங் ஆப் மூலம் இளைஞர்களுக்கு ப்ரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பினர். அவர்களில் சிலர் தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு அறிமுகப்படுத்தி தோழமையாக்கினர். பின்னர் இளைஞர்களிடம் இந்த பெண் இனிக்க இனிக்க பேசி, அவர்களிடம் இருந்து சிறிய அளவிலான பணத்தை கறந்தனர்.

Best Mobiles in India

English summary
For 10 months couple duped hundreds of men on dating app via fake accounts Delhi Police: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X