TikTok பயனர்களை குஷியில் ஆழ்த்திய Firework-ன் புதிய ஜெமி டூல்! என்ன ஸ்பெல் தெரியுமா?

|

டிக்டாக் பயனர்களுக்கு இந்த செய்தி ஒரு அருமையான செய்தியாக இருக்கும். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முன் மற்றும் பின்பக்க கேமராவை ஒரே நேரத்தில் இயக்கி ரெக்கார்ட் செய்யும் சேவை உங்களுக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே?உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்ட Firework பயன்பாட்டு நிறுவனம், புதிய ஜெமி (Gemi) டூல் என்ற மல்டி ரெக்கார்டிங் கேமரா அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு பக்க கேமராவையும் இயக்கும் புதிய அம்சம்

ஒரே நேரத்தில் இரண்டு பக்க கேமராவையும் இயக்கும் புதிய அம்சம்

இந்த புதிய அம்சத்தின்படி, இனி ஐபோன் பயனர்கள் தங்கள் ஐபோன் மூலம் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின்பக்க கேமராக்களைப் பயன்படுத்தி ஸ்ப்ளிட் ஸ்கிரீன் சேவையுடன் வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய முடியும். இதற்கான புதிய அப்டேட்-ஐ ஃபயர்வொர்க் பயன்பாட்டு நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பக்க கேமராவையும் இயக்கும் புதிய அம்சம் இது.

புதிய ஜெமி டூல்ஸ்

புதிய ஜெமி டூல்ஸ்

ஷார்ட் வீடியோ தயாரிக்கும் பயன்பாடான ஃபயர்வொர்க், திங்களன்று இந்தியாவில் ஜெமி என்ற மல்டி கேமரா ரெக்கார்டிங் டூல்ஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜெமி டூல்ஸ்-ஐ பயன்படுத்தி, உங்கள் ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்பக்க கேமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த இந்த சேவை அனுமதிக்கிறது என்று ஃபயர்வொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்அடுத்த இடி.,இனி அந்த வங்கி ஏடிஎம்மில் ரூ.2000 நோட்டு வராது: ரூ.2000 செல்லாதா?-ரிசர்வ் வங்கி பதில்

ஃபயர்வொர்க் ஆப்ஸ்

ஃபயர்வொர்க் ஆப்ஸ்

இந்த பிரத்தியேகமான ஃபயர்வொர்க் பயன்பாட்டுச் செயலி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. பலவிதமான சிறப்பு வீடியோ எபெக்ட்கள், மற்றும் பல விதமான எடிட்டிங் டூல்ஸ்-களுடன், அட்டகாசமான எடிட் அம்சங்களுடன் செயல்பட்டு வரும் இந்த பயன்பாட்டில் தற்பொழுது, இந்த புதிய ஸ்ப்ளிட் ஸ்கிரீன் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தையும் களமிறங்கியுள்ளது.

ஃபயர்வொர்க் நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் கூறியதாவது

ஃபயர்வொர்க் நிறுவனத்தின் வணிக மேம்பாடு தலைவர் கூறியதாவது

"பிளாக்கர்கள், தங்கள் வீடியோவை பதிவு செய்ய முன் மற்றும் பின் கேமராவிற்கு இடையில் ஒரு சமநிலையைப் பெறப் போராடுவதை நாங்கள் அறிந்துகொண்டோம். இதற்கான தீர்வாக ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களையும் பயன்படுத்த இந்த ஜெமி அம்சம் வெளியிடப்பட்டுள்ளது". என்று ஃபயர்வொர்க் நிறுவனத்தின் வணிக மேம்பாடு, வளர்ச்சி மற்றும் கூட்டாண்மைத் தலைவர் சுதர்சன் கதம் கூறியுள்ளார்.

பூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா?பூமி தட்டையானது.,நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் கண்டுபிடித்து விண்ணுக்கு பறந்த விமானி:என்னானது தெரியுமா?

AI கேமராவுடன் மிரட்டலாக செய்லபடும்

AI கேமராவுடன் மிரட்டலாக செய்லபடும்

இந்த புதிய வீடியோ பதிவு செய்யும் கருவி, ஐபோன் பயனர்களை ஒரே நேரத்தில் இரண்டு கேமராக்களைப் பயன்படுத்தி ஸ்ப்ளிட் ஸ்கிரீன் டிஸ்பிளேயுடன் வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. AI அம்சத்துடன் இயங்கும் கேமராக்களில் இந்த அம்சம் இன்னும் மிரட்டலாக செய்லபடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த ஜெமி அம்சம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் பல அம்சங்களுக்கு தயாராகுங்கள்

இன்னும் பல அம்சங்களுக்கு தயாராகுங்கள்

கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட இந்த ஃபயர்வொர்க் நிறுவனம், 30 வினாடிகளில் கதைகளைச் சொல்லக்கூடிய மிகப் பெரிய பொழுதுபோக்கு மற்றும் படைப்பாளர்களுடன் பணியாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், வரும் மாதங்களில் இன்னும் பல சுவாரஸ்யமான அம்சங்களை இந்தியாவில் உள்ள அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Firework Launched New Gemi Tool To Help Vloggers Shoot With Multi Cameras Simultaneously : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X