Home
Apps

மார்க்கு பலே ஆளுயா நீ.. WhatsApp-ல் நான்கவதாக வரும் இன்னொரு View-once ஆப்ஷன்.. இம்முறை எதில்?

மெட்டா (Meta) நிறுவனம் தனது பிரபலமான சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷனை நீக்கியிருந்தாலும், வாட்ஸ்அப்பில் ப்ரைவஸி தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிகிறது. ஏனென்றால் வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான 'வியூ-ஒன்' (View-one) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் தற்போதைக்கு 'வியூ-ஒன்' ஆப்ஷனின் கீழ் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ மெசேஜ்களை மட்டுமே அனுப்ப முடிகிறது. ஒரு போட்டோ அல்லது வீடியோவை ஷேர் செய்யும் முன்னர் அல்லது ஆடியோ மெசேஜை அனுப்பும் முன்னர், 1 வடிவில் உள்ள ஐகானை க்ளிக் செய்தால், பெறுனரால் அதை ஒருமுறை மட்டுமே பார்க்க அல்லது கேட்க முடியும். இந்த அம்சம் விரைவில் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் வருகிறது.

WhatsApp-ல் நான்கவதாக வரும் இன்னொரு View-once ஆப்ஷன்.. இம்முறை எதில்?

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்து உள்ள இந்த தகவல் உண்மையாக இருந்தால், வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது மெசேஜ் அனுப்புபவருக்கு கூடுதல் கட்டுப்பாட்டையும், மற்றவர்கள் தங்கள் மெசேஜ்களை எவ்வாறு பார்க்கிறார்கள் மற்றும் சேமிக்கிறார்கள் என்பது குறித்த ப்ரைவஸியையும் வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆண்ட்ராய்டுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா 2.26.22.7 அப்டேட்டில் இந்த அப்டேட்டை கண்டறிந்த டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ-வின் கூற்றுப்படி, இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இது பகிரப்பட்ட மெசேஜ்களை சேமிப்பது, ஃபார்வர்டு செய்வது, பதிவு செய்வது அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை தடுக்கும்.

இதோடு புது ஸ்கேம் அலெர்ட் அம்சமும் வருகிறது: அடையாளம் தெரியாத மொபைல் எண்களில் இருந்து வரும் ஸ்பேம் மெசேஜ்களை அடையாளம் காண உதவும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 'ஸ்கேம் அலர்ட்' (Scam Alert) என்று அழைக்கப்படும் இந்த அம்சம், உங்களுடைய உரையாடல்களை தனிப்பட்டதாக வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு மெசேஜ் சந்தேகத்திற்குரியதாக தோன்றும் போது பயனர்களை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த அமைப்பு பயனரின் டிவைஸிலேயே முழுமையாக செயல்படும். அதாவது, சாத்தியமான மோசடிகளை கண்டறிய வாட்ஸ்அப் மெசேஜ்களை படிக்கவோ அல்லது அவற்றை எக்ஸ்டர்னல் சர்வர்களுக்கு அனுப்பவோ செய்யாது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது மற்றும் பரவலான வெளியீடு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் 'ஸ்கேம் அலர்ட்' அம்சம் என்றால் என்ன? 'ஸ்கேம் அலர்ட்' என்பது பயனர்கள் மோசடியான மெசேஜ்களை கண்டறிய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு அம்சமாகும். இந்த அம்சத்தை ஆன் செய்யும் போது, ​​அடையாளம் தெரியாத மொபைல் நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் பகுப்பாய்வு செய்யும். அதில் ஏதேனும் ஒரு மெசேஜ் சந்தேகத்திற்குரியதாக தோன்றினால், உங்களை எச்சரிக்கை செய்யும்.

இந்த எச்சரிக்கை நேரடியாக உரையாடலுக்குள்ளேயே காட்டப்படும், இது பயனர்கள் அனுப்புநருடன் உரையாடுவதற்கு முன்பு கூடுதல் தகவல்களை வழங்கும். இந்த அம்சம் உரையாடல்களை தானாகவே பிளாக் செய்வதற்கு பதிலாக, அதை பயனர்களே முடிவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ-வின்படி, இந்த அம்சத்தின் சிறப்பு - ப்ரைவஸி மீதான கவனம் ஆகும்.

ஸ்கேம் அலெர்ட் அம்சமானது, மெசேஜ்களை பயனரின் டிவைஸிலேயே முழுமையாக செயலாக்கும். அதாவது, மெசேஜின் கன்டென்ட் பகுப்பாய்விற்காக வாட்ஸ்அப்பின் சர்வர்களுக்கு அனுப்பப்படாது. இதன் விளைவாக, உரையாடல்கள் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் மூலம் தொடர்ந்து பாதுகாக்கப்படும். மேலும், சாத்தியமான மோசடிகளை சரிபார்க்கும்போது, ​​வாட்ஸ்அப்பால் பயனர்களின் மெசேஜ்களை படிக்க முடியாது. அதாவது இந்த இந்த அம்சம் பின்னணியில் அமைதியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Finally WhatsApp bring view once option for text messages Found in Latest Android Version Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X