இப்போதே பதிவிறக்கம் செய்யத்தூண்டும் ஜியோமணி..! அதன் சிறப்புகள் என்ன..?
தேசம் முழுவதும் பேசப்படும் ஒன்றாகிவிட்டது ரிலையன்ஸ் நிறுவனம், அதற்கு காரணம் அதன் ஜியோ 4ஜி சிம் வழங்கும் 90 நாட்களுக்கான இலவச 4ஜி டேட்டா, வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் என்ற முன்னோட்ட சலுகை தான்.
ரிலையன்ஸ் நிறுவனம் தந்து ஜியோ 4ஜி சிம் உடன் மைஜியோ ஆப்ஸ் என்ற பெயரில் பல ரிலையன்ஸ் ஆப்ஸ்களையும் சேர்த்தே அறிமுகம் செய்தது. ஜியோ 4ஜியின் இலவச முன்னோட்ட சலுகையின்கீழ் வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப்ஸ்களின் சேவைகளையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஜியோமணி :
ரிலையன்ஸ் வழங்கும் ஆப்ஸ்களில் ஒன்றுதான் ஜியோமணி (JioMoney) ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் கிடைக்கின்றது.

வேலட் சர்வீஸ் :
எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது மற்றும் பணத்தை கையில் கொண்டு செல்வது என்பதும் கடினமான ஒரு பணியாக கருதும் காலமிது அதனால் தான் வேலட் சர்வீஸ்கள் பிரபலாமாகிக் கொண்டே போகிறது.

அம்சங்கள் :
அப்படியாக ஜியோமணி ஆப் ஆனது உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் தன்னுள் சில சிறப்பான அம்சங்களையும் பெற்றுள்ளது, அந்த அம்சங்கள் இதோ.!

பிரீமியம் :
ஜியோமணி வேலட் ஆப் ஆனது பில், மொபைல் பில், டிடிஎச் இணைப்பு, ஆன்லைன் ஷாப்பிங், ரீசார்ஜ், பண பரிமாற்றம், காப்பீடு பிரீமியம் போன்ற பரிவர்த்தனையையும் நிகழ்த்தும்.

தோல்வி விகிதம் :
உடன், இந்த ஆப் ஆனது மிக குறைந்த அளவிலான தோல்வி விகிதம் (failure rate) கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கேனிங் அம்சம் :
ஜியோமணி ஆப்பில் உள்ள பார்கோடு ஸ்கேனிங் அம்சம் ஆனது நீங்கள் விரைவில் வணிகர் கடைகளில் பார்குறியீடுகளைச் ஸ்கேன் செய்யும் வசதியை வழங்குகிறது.

வேலட் :
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் சேவை மூலம் உங்கள் வேலட்தனை பணத்தால் நிரப்பிக் கொள்ள வேண்டும்.

பரிவர்த்தனை :
நீங்கள் அந்த நடவடிக்கை முடித்தவுடன், ஜியோமணி வேலட் பயன்படுத்தி எந்த விதமான பரிவர்த்தனையையும் உங்களால் அனுபவிக்க முடியும்.

கேஷ் பேக் :
ஜியோமணி வேலட் ஆப் கொண்டு, நீங்கள் பெரிய தள்ளுபடிகள், கூப்பன்கள், கேஷ் பேக் சலுகைகளை உங்கள் உங்கள் சாதனத்தில் இருந்து நேரடியாக பெற முடியும்.

கட்டுப்பாடு :
உடன் இதனை கொண்டு நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் பணம் செலுத்த முடியும், ஆனால் இப்போது சில தளங்கள் மட்டுமே என்ற கட்டுப்பாடு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமை :
ஜியோமணியின் தனிப்பட்ட அம்சம் என்னெவென்றால் நீங்கள் போன்ற ரிலையன்ஸ் ரீடெயில், ரிலையன்ஸ் டிஜிட்டல், ரிலையன்ஸ் நியூ, ரிலையன்ஸ் ஜுவெல்ஸ் மற்றும் பிற ரிலையன்ஸ் நிலையங்களில் ஜியோமணி கொண்டு எளிமையாக பணம் செலுத்த முடியும்.

வங்கி :
உடன் இந்த ஆப்பில் உள்ள பேலன்ஸை நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் செலுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications