முதல் நாளிலேயே 1 மில்லியன் FAU-G டவுன்லோடு.. ஆனால், ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

|

nCore கேம்ஸ் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள FAU-G பியர்லெஸ் அண்ட் யுனைடெட் கார்ட்ஸ் (Fearless and United Guards) என்ற கேம் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பப்ஜி கேமிற்கான சிறந்த மாற்றாக இந்த FAU-G கேம் இருக்கும் என்று, இந்தியா பப்ஜி கேமை தடை செய்ததிலிருந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FAU-G கேம் அறிமுகம்

FAU-G கேம் அறிமுகம்

நேற்று இந்த கேம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் துவங்கிய இந்த கேமிற்கான முன்பதிவுக்குப் பின்னர் ஒருவழியாக நேற்று இந்த FAU-G கேம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் வெளியான பிரமாண்டமான விமர்சனங்கள் அனைத்தும் இந்த கேம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேபோல், முதல் நாளிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான பதிவிரகங்களை இந்த கேம் பெற்றுள்ளது.

முதல் நாளில் 5 மில்லியன் பதிவிறக்கம் எதிர்பார்ப்பு

முதல் நாளில் 5 மில்லியன் பதிவிறக்கம் எதிர்பார்ப்பு

இந்த கேம் தயாராகி வந்த காலகட்டத்தில், இந்தியாவில் இந்த கேமிற்கு நல்ல வரவேற்பு நிச்சயம் கிடைக்கும் என்று நிறுவனம் நம்பிக்கையுடன் கூறியது. அதேபோல், இந்த கேமை சுமார் 5 மில்லியன் பயனர்களுக்கு மேல் நிச்சயம் பதிவிறக்கம் செய்வார்கள் என்று அதன் முன்பதிவு தகவல் தெரிவித்தது என்று நிறுவனம் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!

வீணாய் போன ஓவர் பில்ட் அப்

வீணாய் போன ஓவர் பில்ட் அப்

ஆனால், நிறுவனம் கூறியது போல் நடக்கவில்லை என்றாலும் கூட, முதல் நாளில் 1 மில்லியன் பதிவிறக்கம் என்பது பாராட்டிற்குரியதே.

இருப்பினும், FAU-G ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பது வருத்தமளிக்கிறது. காரணம், அனைவரும் பப்ஜி கேமிற்கான மாற்றாக இந்த கேமை டிரை செய்ய நினைத்து ஆர்வமாகக் காத்திருந்த நேரத்தில், நிறுவனமும் கொஞ்சம் ஓவர் பில்ட் அப் கொடுத்து கேமர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.

முழுமையான கேமை நிறுவனம் வெளியிடவில்லையா?

முழுமையான கேமை நிறுவனம் வெளியிடவில்லையா?

ஆனால், எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல் முழுமையான கேமை FAU-G நிறுவனம் வெளியிடவில்லை என்பது தான் இப்போது பலருக்கும் வேதனையாக உள்ளது.

நேற்று கூகிள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்ட FAU-G கேமில் வெறும் சிங்கிள் பிளேயர் காம்பாட் மோடு மட்டுமே இப்போது விளையாட அனுமதிக் கிடைக்கிறது.

பப்ஜி ரசிகர்களும் ஏமாற்றம்

பப்ஜி ரசிகர்களும் ஏமாற்றம்

அதில் மிச்சம் உள்ள 5 vs 5 டீம் டெத் மேட்ச், போன்ற மிகவும் சுவாரசியமான மோடுகள் இன்னும் விளையாடுவதற்குத் தயாராகவில்லை என்பதே உண்மை.இதனால், கேமை பதிவிறக்கம் செய்த கேமார்களும், பப்ஜி ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆப்பிள் பயனர்களுக்கு FAU-G கேம் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் கிடைக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
FAU-G: Fearless and United Guards crosses over one million installs on launch day but still the game is not as impressive like PUBG : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X