"கீகீ சாலேஞ்" போய்டுச்சு இப்ப "ஃபால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்".! இது எங்கு போய் முடியுமோ.!
இந்தியாவில் மட்டும் 67 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், இன்ஸ்டாகிராம் செயலியை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய காலத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாத மனிதர்களைப் பார்ப்பதே அரிது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவில் மட்டும் 67 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா, பிரேசில்-க்கு பிறகு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இன்ஸ்டாகிராம் சாலேஞ்
அண்மையில் இன்ஸ்டாகிராம் சாலேஞ் என்ற புதிய கலாச்சாரம் உலக அளவில் வெகு வேகமாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் தளத்தில் பல வினோதமான புதிய வகை சாலேஞ்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் கீகீ சாலேஞ் மிகவும் வைரல் ஆகியது, ஆனால் அதில் இருந்த ஆபத்தை உணர்த்த நெட்டிசன்கள் அதை புறக்கணித்துவிட்டனர்.
"ஃபால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்"
தற்பொழுது ஆபத்தில்லாத புதிய சாலேஞ், இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் நெட்டிசன்ஸ்களிடம் வெகு வேகமாக வைரல் ஆகி வருகிறது. அது என்ன சாலேஞ்ன்னு கேக்குறீங்களா? இந்த சாலேஞ்ற்கு பெயர் "ஃபால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்"(Falling Stars Challenge).
#fallingstarschallenge
இந்த ஃபால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்ல முக்கியமா எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் நீங்கள் தவறி கீழே விழுந்து உங்களைச் சுற்றி உங்களுக்குச் சம்பந்தமான பொருட்கள் சிதறி கிடப்பது போல புகைப்படத்தை கிளிக் செய்து #fallingstars அல்லது #fallingstarschallenge என்று டேக் செய்து இன்ஸ்டாகிராம் இல் போஸ்ட் செய்யுங்கள்.
ஸ்லிப் ஆகிட்டேன்.!
பாவம் இவங்க கார்ல இருந்து தவறி விழுந்துட்டாங்களாம். பெண்களோட ஹாண்ட் பேக்ல இவ்வளவு ஐட்டங்களா.?
காய் கறி விலைவாசி தான் காரணமோ?
காய் கறி விலைவாசியெல்லாம் கேட்டு மயங்கிட்டாங்க போல. ஆனா கரண்டிய புடுச்ச மாதிரி விழுந்துருக்க பாருமா, அது ரொம்ப பிரமாதம்.
லிட்டில் ஃபால்லிங் ஸ்டார்.!
அட இவரை தெரியலையா? இவர்தாங்க நம்ம "லிட்டில் ஃபால்லிங் ஸ்டார்".
காப்பி மேட்டர்.!
பிரண்டு டையர்டு மேட்டரு, காப்பி சாப்பிட்டு மட்டை ஆகிடப்பில.
தலை கீழாக தான் குதிப்பேன்.!
உன் கால் தரைல படல, நீ நீதமான இல்லை.
எப்புடி, இப்பிடி எல்லாம் யோசிக்கிறானுங்க?
பீச்ல கூல படுத்து போஸ் கொடுக்குறதுனா இதுதானா.!
அல்டிமேட்.!
இது வேற லெவல்.! சிரிச்சு வையுறு வலிக்குதுடா சாமி.
ஃபால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்.! டால் வெர்ஷன்.!
பொம்மைக்கு வந்த சோதனையா இது.


Click it and Unblock the Notifications