DARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.!

இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை கண்டுபிடிப்பதே பெரும் பாடாய் இருக்கிறது.

|

ஒரு மாதத்திற்கு ஒரு புதிய அம்சம் என்றால் பரவாயில்லை; கடந்த இரண்டு ஆண்டுகளில், பேஸ்புக், பல வகையான (எண்ணிக்கையிலான) புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அறிமுகமான அம்சங்கள் பயனர்களுக்கு உதவுவதற்கு மாறாக, எது எங்கு உள்ளது.? இது எதற்கு.? எந்த அம்சம் எதற்கு பயன்படும்.? என்று பயனர்களை குழப்பி கொண்டு இருக்கிறது.

DARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.!

இன்னும் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை கண்டுபிடிப்பதே பெரும் பாடாய் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் முனைப்பின் கீழ், பேஸ்புக் எப்8 டெவலப்பர் மாநாட்டில், பேஸ்புக்கின் மெசெஞ்சர் பயன்பாட்டின் இன்டர்பேஸை மாற்றியமைக்கும் அறிவிப்பு வெளியானது.

மார்க் ஜுக்கர்பெர்க்கின் வாக்குறுதி.!

"நீங்கள் செய்திகளை அனுப்பும்போது, ​​உங்களுக்கு எளிய மற்றும் வேகமாக அனுபவம் தேவை. இந்த கருத்துக்களை மையமாகக் கொண்டு, குறிப்பிட்ட மென்பொருளை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்" என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். பேஸ்புக் மெசெஞ்சரின் துணைத் தலைவர் டேவிட் மார்கஸ், "பேஸ்புக் மெசெஞ்சருக்கான நெறிப்படுத்தப்பட்ட மேம்படுத்தல் ஆனது மிக மிக விரைவில் வெளியாகும், மற்றும் இது சார்ந்த பணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

DARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.!

சரி அப்படி என்ன தான் மாற்றங்கள் நிகழும்.?

தற்போது வரையிலாக, மெசெஞ்சர் ​​பயன்பாட்டில் நேவிகேஷன்களுக்காக, கீழே ஐந்து டேப்ஸ் மற்றும் மேல மூன்று டேப்ஸ் உள்ளன. கூறப்படும் மருவடிவமைப்பில், கீழே மூன்று முக்கிய டேப்ஸ் இடம்பெறும். அது சாட்ஸ், காண்டாக்ஸ் மற்றும் திசைகாட்டி போன்ற லோகோவை கொண்டுள்ள ஒரு டேப் இடம்பெறும். இது பேஸ்புக்கில் உள்ள நண்பர்களை கண்டுபிடிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெசெஞ்சரின் லோகேஷன் ஷேரிங் மூலம் நண்பர்களைப் சந்திக்க முயற்சிக்கும் "தற்காலிக" பயனர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடன் அவர்களை நிரந்தரமான பயனர்களாக மாற்ற உதவும்.

DARK MODE உட்பட மெசெஞ்சரில் பல அம்சங்கள் மற்றும் மாற்றங்கள்.!

டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது.!

கீழே உள்ளது போலவே, புதிய மெசெஞ்சர் டிசைனின் மேல் பக்கத்திலும் மூன்று டேப்ஸ் இடம்பெறும் : கேமரா, வீடியோ கால் மற்றும் கம்போஸ். மேல் பக்கத்தின் இடதுபுறத்தில் பயனரின் ஐகான் மற்றும் தேடல் பட்டன் இடம்பெறும். இந்த புதிய மேம்படுத்தலில், டார்க் மோட் அம்சமும் இடம்பெறுகிறது. இது பேஸ்புக் மெசெஞ்சரில் நீண்ட நேரம் செலவழிக்கும் பயனர்களை கவரும் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்கூறப்பட்டுள்ள அம்சங்களை தவிர்த்து சாட் ஹெட்ஸை (Chat Heads) என்கிற ஒரு விருப்ப அம்சமாக மாற்ற உள்ளது. இந்த மெசெஞ்சர் அப்டேட் அனைத்தும் "மிக மிக விரைவில்" வருவதாக கூறப்படுகிறது. ஆக அப்டேட் கிடைக்கும் வரை மட்டுமே காத்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Facebook will simplify Messenger app again. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X