வாட்ஸ்அப்பிற்கு நேரம் சரியில்லை.. டெலிகிராமுக்கு குரு உச்சத்தில இருக்கு.. ஒரே நாளில் 70 மில்லியன் பயனர்கள்..

|

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸ்சேன்ஜ்ர் ஆப்ஸ்கள் திங்கட்கிழமை இரவு திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் இந்த ஆப்ஸ்கள் திடீரென செயல்படாதலால் பயனர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், போனில் தான் ஏதோ கோளாறு போல என்று நினைத்து பல முறை பயனர்கள் அவர்களின் போனை ரீஸ்டார்ட் செய்துள்ளனர்.

 அனைவரும் நெட்வொர்க் பிரச்சனை, வைப்பை பிரச்சனை என்று தான்

முதலில் அனைவரும் நெட்வொர்க் பிரச்சனை, வைப்பை பிரச்சனை என்று தான் நினைத்துள்ளனர். இதனால், பல முறை நெட்வொர்க் ஆன் மற்றும் ஆப் செய்வது, வைஃபை இணைப்பை துண்டித்து மீண்டும் கனெக்ட் செய்வது என்று அவர்களுக்கு தெரிந்த எல்லா முயற்சியையும் மேற்கொண்டு அதிலும் தோல்வியில் முடிய சோர்வாகி முயற்சியை கைவிட்டனர். பின்னர், கூகிள் செய்தி, டிவிட்டர் மூலம் சில மணி நேரங்களுக்குப் பின்னர் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கியதை அறிந்து கொண்டனர்.

பிரச்சனைக்கு தொழில்நுட்ப கோளா

இந்த திடீர் பிரச்சனைக்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் தான் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. சுமார் 6 மணி நேர நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மூன்று ஆப்ஸ்களும் செயல்பாட்டிற்கு வந்தது. இதனால், ஒரே இரவில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் மக்கள் வாட்ஸ்அப் மற்றும் நிறுவனத்தின் பிற ஆப்ஸ்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று அறிந்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

விண்வெளியில் படப்பிடிப்பு- நேரடியாக விண்ணுக்கு சென்ற இயக்குனர், நடிகை: வரலாற்றின் முதல் திரைப்படம்!விண்வெளியில் படப்பிடிப்பு- நேரடியாக விண்ணுக்கு சென்ற இயக்குனர், நடிகை: வரலாற்றின் முதல் திரைப்படம்!

இருந்தே வாட்ஸ்அப் பயனர்கள்

கடந்த ஆண்டில் இருந்தே வாட்ஸ்அப் பயனர்கள் ஏராளமானோர் டெலிகிராம் ஆப்ஸ் பக்கம் மாறத்துவங்கினர். குறிப்பாக வாட்ஸ்அப் புது பயனர் விதியை அறிமுகம் செய்தபோது ஏராளமான பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து டெலிகிராம் பக்கம் மாறினார். அதேபோல், திங்கட்கிழமை நேரத்தை சில மணிநேர முடக்கம் காரணமாக டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு மடமடவென உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த யூசர்கள், கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் யூசர்களாக மாறியுள்ளனர்.

புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள்..புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள்..

செயல்படாமல் இருந்த நேரத்தில் சுமார்

வாட்ஸ்அப் செயல்படாமல் இருந்த நேரத்தில் சுமார் 70 மில்லியன் புது பயனர்கள் டெலிகிராம் செயலில் அவர்களுக்கென்ற தனி அக்கௌன்ட்டை உருவாக்கியுள்ளனர் என்று டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் பேசும்போது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இரட்டிப்பாக சில மணி நேரத்தில் உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 70 மில்லியன் புது யூசர்கள் மற்ற ஆப்ஸ்களை தேர்வு

இந்த 70 மில்லியன் புது யூசர்கள் மற்ற ஆப்ஸ்களை தேர்வு செய்யாமல் டெலிகிராம் ஆப்ஸை தேர்வு செய்ததற்கு நிறுவனம் அவர்களை முழுமனதோடு வரவேற்கிறது என்று அவர் வாழ்த்தியுள்ளார். எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதால், டெலிகிராமுக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானமாக இதை நினைப்பதாக பாவெல் துரோவ் கூறியுள்ளார். இதேபோல் சிறப்பான அனுபவத்தை டெலிகிராம் தொடர்ந்து வழங்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

பிஎஸ்என்எல் வழங்கும் இலவச 4 ஜி சிம் கார்டு.. முதல் ரீசார்ஜ்க்கு தள்ளுபடி.. நம்ம வட்டம் வரப்ப வுட்றாதீங்க..பிஎஸ்என்எல் வழங்கும் இலவச 4 ஜி சிம் கார்டு.. முதல் ரீசார்ஜ்க்கு தள்ளுபடி.. நம்ம வட்டம் வரப்ப வுட்றாதீங்க..

ஆப்ஸில் ஏராளமான பயனர்கள்

டெலிகிராம் ஆப்ஸில் ஏராளமான பயனர்கள் உலகளவில் ஒரே நேரத்தில் குவிந்ததால் நெட்வொர்க் நெருக்கடி ஏற்பட்டு டெலிகிராம் பயன்பாட்டின் வேகம் குறைந்திருப்பதையும் நிறுவனம் அறிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த சிக்கலுக்கான தேர்வை நிறுவனம் சரி செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார். டெலிகிராம் ஆப்ஸிற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் அதிகப்படியான புதிய பயனர்களை டெலிகிராம் வரவேற்கிறது என்றும் கூறியுள்ளார். என்னதான் டெலிகிராம் பக்கம் பயனர்கள் திரும்பினாலும், வாட்ஸ்அப் இயங்க துவங்கிய பின் அனைவரும் பழைய நிலைக்கு வந்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook WhatsApp Outage Saw 70 Million New Users Joining Telegram: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X