திடீரென செயல் இழந்த Whatsapp , Facebook மற்றும் Instagram.. காரணம் என்ன? மௌனம் காக்கும் நிறுவனம்..

|

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அதன் மெசேஜ்ஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெஸ்சேன்ஜர் ஆகியவை திடீர் செயலிழப்பைக் கண்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆன்லைனில் பயனர்கள் வெள்ளிக்கிழமை இரவு 10:55 மணியளவில் அவர்களின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெஸ்சேன்ஜர் சேவைகளில் சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். இந்த செயலிழப்பு டிராக்கர் டவுன்டெக்டர் செயலிழப்புகளில் ஒரு ஸ்பைக்கைக் காட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிழப்பு

உலகம் முழுக்க வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிழப்பு

ஒரே சமயத்தில் உலகம் முழுவதிலும் உள்ள பயனர்கள் இந்த சிக்கலைச் சந்தித்து உள்ளனர். குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் செயல் இழப்பு பற்றி புகார் அளிக்க டிவிட்டரை நாடியுள்ளார். இதுவரை இந்த திடீர் செயலிழப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, ஆனால் இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்துப் பதிவிட்டு புகார் அளித்து வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மெசேஜ்கள் எதுவும் சென்ட் ஆகவில்லை

மெசேஜ்கள் எதுவும் சென்ட் ஆகவில்லை

வாட்ஸ்அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ அழைப்பு, ஆடியோ அழைப்பு, GIF மற்றும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் மெசேஜ் என்று எதுவுமே பயனர்களுக்கு சென்ட் ஆகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர்கள், அவர்களின் இன்ஸ்டாகிராமில் பதிவுகளையும், ரீல்ஸ் இடுகைகளையும் பயன்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார். டிவிட்டரில் வாட்ஸ்அப்பின் அதிகாரப்பூர்வ கணக்கில் ஏராளமான வாட்ஸ்அப் பயனர்கள் புகார் அளித்தும், இதுவரை ஒரு செய்தியையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

வேகமாக சரி செய்யப்பட்ட சிக்கல்

வேகமாக சரி செய்யப்பட்ட சிக்கல்

பேஸ்புக்கின் பயன்பாட்டில் இந்த சிக்கல் உலகளவில் பெரிய அளவில் யாரையும் பாதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, சில பயனர்கள் சிக்கலை எதிர்கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலை வாட்ஸ்அப் நிறுவனம் 45 நிமிடங்களில் சரி செய்துள்ளது. இரவு 10:55 மணிக்கு செயல் இழந்த வாட்ஸ்அப் மீண்டும் 11:40 மணி அளவில் வேலை செய்யத் துவங்கியுள்ளது.

இதற்கு முன்னர் தோன்றிய இதே சிக்கல்

இதற்கு முன்னர் தோன்றிய இதே சிக்கல்

இதற்கு முன்னர் இதே போன்று, கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று வாட்ஸ்அப் நிறுவனம் சிக்கலைச் சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் இதே போன்ற சிக்கல் காலை 07:55 மணி அளவில் தோன்றியது, அப்போதும் வாட்ஸ்அப் நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

படு பிசியான டிவிட்டர்

படு பிசியான டிவிட்டர்

ஆனால், சிக்கல் உருவானது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வாட்ஸ்அப் சிக்கலைச் சரி செய்து வாட்ஸ்அப்-ஐ மீண்டும் செயல்பட வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல் இழந்த நேரத்தில் டிவிட்டர் படு பிசி ஆகிவிட்டது.

Best Mobiles in India

English summary
Facebook, Whatsapp and Instagram Facing Mass Outage Globally Reason Unknown : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X