மீண்டும் பிரச்சணையில் சிக்கிய பேஸ்புக்: வேற மாதிரி தகவல் திருட்டு.!

ஆய்வறிக்கையில் 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள்தானாக பேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

|

பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோர் மற்றும் பயன்படுத்தாதோர் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் பிரச்சணையில் சிக்கிய பேஸ்புக்: வேற மாதிரி தகவல் திருட்டு.!

குறிப்பாக ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கிள் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் என்ற மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை பேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்பு இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெவலப்பர்கள்

டெவலப்பர்கள்

இந்த புதிய மென்பொருள் அம்சங்கள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும். பின்பு இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு 34 செயலிகளை எடுத்துக்கொண்டுள்ளனர். ஒவ்வொன்றும் 10 முதல் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். குறிப்பாக இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டி.கே.

எஸ்.டி.கே.

மேலும் பேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அவற்றில் ஆகஸ்ட் 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது, இதை ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.

 61 சதவிகித செயலிகள்

61 சதவிகித செயலிகள்

ஆய்வறிக்கையில் 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக பேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பின்பு பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கவுண்ட்

அக்கவுண்ட்

குறிப்பாக பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook tracks even those Android users who don't have the app: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X