ஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி

By Siva
|

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு 'இன்ஸ்டண்ட் கேம்ஸ்' என்ற வசதியை அளித்துள்ள நிலையில் அதே கேம்ஸ் பிரியர்களுக்கு தற்போது லைவ் ஸ்ட்ரீமிங் வசதியையும் அளித்து கேம்ஸ் விளையாடுபவர்கள் லைவ்வாக வீடியோ சாட்டிங் செய்யும் அனுபவத்தினை தந்துள்ளது

ஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி

இன்று முதல் ஆரம்பித்துள்ள இந்த லைவ் ஸ்டீரிமிங் வசதி காரணமாக ஃபேஸ்புக்கில் கேம்ஸ் விளையாடுபவர்கள் தங்களுடைய அனுபவத்தை வீடியோ சாட் மூலமாக தங்களின் விருப்பத்திற்கு உரியவரிடத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அனுபவத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவர் பெற்று பயனடையவும், தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்ளவும் இந்த புதிய வசதி உதவுவதாக ஃபேஸ்புக் தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது

மேலும் இந்த புதிய வசதியின் மூலம் லைவ் ஸ்டீரீம்களை பதிவு செய்து கொள்ளவும் முடியும். உலகம் முழுவதும் மெசஞ்சர் மூலம் 245 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கும் மேலாக வீடியோ சாட் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஃபேஸ்புக் பயனாளர்கள் கேம்ஸ் விளையாடி கொண்டிருக்கும்போதே தங்கள் அனுபவத்தை வீடியோ மூலம் பகிரும் வசதியை அளிக்க உள்ளோம்

ஃபேஸ்புக் அளிக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் வீடியோ சாட்டிங் வசதி

இதனிடையே நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், "இன்ஸ்டண்ட் கேம்ஸ்" என்ற கூடுதலான வசதியை அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'ஆங்கிரி பேர்டு' என்ற புதிய அபாரமான கேம்ஸ் ஒன்றை தொடங்கி பயனாளர்களை ஆச்சரியப்படுத்த உள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பிரபலமான கேம்ஸ் 'டெட்ரிஸ்' தற்போது ஃபேஸ்புக்குடன் இணைகிறது. இதில் மராத்தான் பயன்முறை போன்ற அருமையான அம்சங்களும் மற்றும் மெர்ஜ் குழு மெசஞ்சரில் உள்ள நண்பர்களுடன் விளையாடும் திறனும் அடங்கும்.

2017 நவம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!2017 நவம்பர் : பிரபலமான ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

இது மிகவும் எளிமையானது. கேம்ஸை தொடங்கும்போது வலது மேல்புறத்தில் உள்ள கேமிரா ஐகானை ஒரு தட்டு தட்டிவிடுங்கள். பின்னர் அதில் தோன்றும் ஆடியன்ஸ்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்து பின்னர் லைவ் வீடியோவை ஸ்டார் செய்யுங்கள்

மேலும் உங்கள் லைவ் சாட்டிங்கை ரிகார்ட் செய்ய, 'ஸ்டார்ட் லைவ் வீடியோ' என்ற பட்டனை அழுத்துங்கள். இந்த ஒளிபரப்பு முடிந்தபின்னர் உங்களுடைய வீடியோ உங்களுடைய பக்கத்தில் பதிவாகிவிடும். நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியாதவர்கள் உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று அந்த வீடியோவை பார்த்து கொள்ளலாம். மேலும் அந்த வீடியோவை நீங்கள் எந்த நேரத்திலும் டெலிட் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook is introducing two new features to Instant Games that will help you engage and connect with those you care about in new and different ways.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X