பேஸ்புக் நியூஸ் ஃபீடில் புதிய மாற்றம்: விரைவில் அமலாகும் என தகவல்

By: Meganathan S

பேஸ்புக் தளத்தில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நியூஸ் ஃபீடை இரண்டு வெவ்வேறு பக்கங்களாக பிரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பேஸ்புக் பயன்படுத்தும் போது தனிப்பட்ட நியூஸ் மற்றும் வணிக ரீதியிலான தகவல்கள் ஒருபக்கம் பார்க்க முடியும்.

பேஸ்புக் நியூஸ் ஃபீடில் புதிய மாற்றம்: விரைவில் அமலாகும் என தகவல்

இதுவரை இலங்கை, போலிவியா, ஸ்லோவேகியா, செர்பி, கௌதிமாலா மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பிரிக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களை பார்க்க முடியும். பிரைமரி ஃபீட் மற்றும் வணிக ரீதியிலான தகவல்கள் எக்ஸ்புளோர் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த ஆறு நாடுகளில் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது.

பேஸ்புக் நியூஸ் ஃபீட் வலைத்தளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி என வாடிக்கையாளர்கள் திறக்கும் முதன்மை பக்கமாக இருக்கிறது. இங்கு நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் வணிக ரீதியிலான விளம்பரங்களுடன் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து பின்தொடரும் நட்சத்திரங்களின் போஸ்ட்களை பார்க்க முடியும். இத்துடன் பரிந்துரைக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இதர தகவல்களையும் பார்க்கலாம்.

உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள்.!

அனைத்து வகையான தகவல்களும் இடம்பெறும் ஒற்றை பக்கமாக நியூஸ் ஃபீட் பொதுவான அம்சமாக இருந்து வருகிறது. எனினும் சோதனை வெற்றிபெற்றதும் மற்ற நாடுகளில் இந்த அம்சம் வழங்கப்படலாம்.

இந்த திட்டத்தின் நோக்கம், மக்கள் இரண்டு வகையான நியூஸ் ஃபீட் அனுபவத்தை விரும்புகிறார்களா என்பதை அறிந்து கொள்வதே ஆகும். பேஸ்புக் வாடிக்கையாளர்கள் இதுகுறித்து எவ்வாறான கருத்தை வெளிப்படுத்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம் என பேஸ்புக் நியூஸ் ஃபீட் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்தார்.

இதுவரை இந்த அம்சம் பெரும்பாலான பயணர்களுக்கு நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கும். தகவல்களை பிரித்து காண்பிக்கும் என்பதால் நன்மையளிக்கும் என்றாலும் பேஸ்புக்கில் தனி பக்கம் வைத்திருப்போருக்கு இது தீமையளிக்கும் ஒன்றாகவே இருக்கும்.

இதுதவிர சமூக வலைத்தள நிறுவனத்தின் திடீர் மாற்றம் சில வணிக நிறுவனங்களுக்கு லாபகரமானதாகவும், விளம்பரம் செய்ய உதவியாகவும் இருக்கும். எனினும் அனைவரும் இந்த திட்டத்தை வரவேற்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சோதனையில் சில செய்தி சார்ந்த பேஸ்புக் பக்கங்கள் வழக்கத்தை விட குறைந்தளவு வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச அளவில் இந்த திட்டத்தை சோதனை செய்ய எவ்வித திட்டமும் கிடையாது என மொசெரி தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து வணிக ரீதியிலான பக்கங்களையும் பணம் செலுத்த வேண்டும் என பேஸ்புக் கட்டாயப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.Read more about:
English summary
Facebook is now testing the idea of dividing its News Feed in two, separating commercial posts from personal news.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot