பேஸ்புக் மெஸ்சேஞ்சரில் இதுவும் வந்தாச்சு.! இனி ஜாலிதான்.!
இந்நிலையில் பேஸ்புக் மெஸ்சேஞ்சரில் வீடியோக்களை பார்த்து மகிழும் வகையில், தற்போது சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் இந்த புதிய வசதியால், பயனர்கள் குரூப் சாட்டிங்கின் போதும், நண்பர
பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு ஏராளமான வசதியை அறிமுகம் செய்து வருகின்றது. புதிய அப்டேட்களில் பயனர்களுக்குக் கொடுத்து அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பேஸ்புக் மெஸ்சேஞ்சரில் வீடியோக்களை பார்த்து மகிழும் வகையில், தற்போது சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இந்த புதிய வசதியால், பயனர்கள் குரூப் சாட்டிங்கின் போதும், நண்பர்களுடன் சேர்ந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

வீடியோ குறித்து சாட்டிங்:
பேஸ்புக் மெஸ்சேஞ்சரில் பயனர்கள் அதிகமான நேரத்தைச் செலவிட வைக்கும் வகையில், பேஸ்புக் புதிய அம்சத்தை வழங்க இருக்கின்றது. புதிய அம்சம் மெஸ்சேஞ்சரில் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஓரே வீடியோவை பற்றி சாட்டிங் செய்ய முடியும்.

விரைவில் அறிமுகம்:
இந்த வசதியில் வீடியோ பார்க்கும் போது, அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெஸ்சேஞ்சரின் புது அம்சம் பேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனையைச் செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்து முழு விவரங்களை விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம்:
ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்தும் வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும் பேஸ்புக்கில் இருந்து யூஆர்எல் முகவரியைப் பதிவு செய்ய முடியும் என்று மெஞ்சேஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது.

யூடிப்யூப் இணைந்து வீடியோ:
இதுமட்டும் இன்றி மெஸ்சேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடிப்யூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை பேஸ்புக் மேம்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

கூடுதல் வருவாய்:
வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம் மெஸ்சேஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில் விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெய்லர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications