Home
Apps

அரசியல் விளம்பரங்களுக்கான புதிய விதிகளை நியமித்தது ஃபேஸ்புக்

By Siva

ரஷ்யாவை சேர்ந்த சில விளம்பர நிறுவனங்கள் சுமார் $100,000 மதிப்புள்ள போலியான விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் அதன் தாக்கம் சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலித்ததை கண்டுபிடித்துள்ளது இது ஃபேஸ்புக் விளம்பர பிரிவை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது.

அரசியல் விளம்பரங்களுக்கான புதிய விதிகளை நியமித்தது ஃபேஸ்புக்

இதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் செய்துள்ள புதிய முடிவின்படி இனிமேல் ஃபேஸ்புக் வலைதளத்தில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை இன்னும் வெளிப்படையான வகையில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்

இந்த புதிய முடிவின்படி இனிமேல் ஃபேஸ்புக் தளத்தில் பதிவு செய்யப்படும் அரசியல் சார்ந்த விளம்பரத்தாரர்கள் அவர்களின் அடையாளத்தையும், இருப்பிடத்தையும் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அதும்ட்டுமின்றி விளம்பரதாரர்களின் விளம்பரத்தில் "யாருக்காக யார் பணம் செலுத்தியது" என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்பதும் கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயனாளிகல் பேஸ்புக் பக்கம் இயங்கும் அனைத்து விளம்பரங்களுக்கும் இப்போது அணுகலாம், மேலும் ஒரு பக்கம் கடந்த காலங்களில் இயங்கும் விளம்பரங்கள். ஒரு விளம்பரம், பார்வையாளர்கள் மற்றும் பதிவுகள் ஆகியவற்றில் இயங்குவதில் முதலீடு செய்யப்பட்ட நிதி உட்பட விவரங்களை பேஸ்புக் பகிர்ந்து கொள்ளும்.

மேலும் விளம்பரதாரர்கள் தரும் தகவல்களையும் அரசியல் விளம்பரங்களையும் இனிமேல் கண்காணிக்க மெஷின் அல்காரிதம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் அந்த தகவல்கள் சரிபார்க்கப்படும் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. இந்த புதிய அல்காரிதம் அரசியல் விளம்பரங்களை மட்டுமின்றி வன்முறையாளர்கள், தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்தும்க் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் பேஸ்புக் அரிதாகத்தான் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Facebook CEO Mark Zuckerberg announced yesterday that Facebook will now roll out new measures of transparency for political advertisements on its platform.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X