கிரிப்டோகரன்ஸி விளம்பரங்களுக்கு பேஸ்புக்கில் தோன்ற தடை?
பிட்காயின், ஐசிஓ (இன்டியல் காயின் ஆஃப்ரிங்ஸ்) உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸி தொடர்பான விளம்பரங்களுக்கு பேஸ்புக் தடை விதித்து வருகிறது.

சமூக வலைத்தளமான பேஸ்புக், கிரிப்டோகரன்ஸிகள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளுக்கு சமீபகாலமாக மவுசு அதிகரித்து வருவதால், செய்திகள் அதிகளவில் இடம்பெறுவது நாம் அறிந்ததே.
சந்தையை திசைத் திருப்புவதற்கு எதிரான "உள்நோக்கத்தோடு கூடிய ஒளிபரப்பு" விதிமுறையின் கீழ் ஐசிஓ (இன்டியல் காயின் ஆஃப்ரிங்ஸ்) உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸி தொடர்பான விளம்பரங்களுக்கு பேஸ்புக் தடை விதிக்கப் போவதாக, சில செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்ஸ்டாகிராம், ஆடியன்ஸ் நெட்வார்க் மற்றும் மெசேஞ்சர் உள்ளிட்ட பேஸ்புக்கின் மற்ற தளங்களிலும் மேற்கண்ட தடை அமல்படுத்தப்படலாம்.
இந்த புதிய விதிமுறையின் மூலம் பெரும்பாலும் தவறான விளம்பர உள்ளடக்கத்தோடு தொடர்புடையதாக உள்ள நிதிநிலை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக, அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
த வெர்ஜ் பத்திரிக்கையில் வெளியான செய்திக்குறிப்பில், பேஸ்புக்கில் வெளியாகும் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் குறித்து மோசடி பயமோ அல்லது தவறான உள்ளடக்கமோ இருக்கலாம் என்ற எந்தவிதமான பயமும் இல்லாமல் மக்கள் கண்டறிந்து கற்று கொள்ள வேண்டும் என்று பேஸ்புக் விரும்புகிறது.
ஐசிஓ, கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் பிற பைனரி தேர்வுகளைக் குறித்து எண்ணற்ற நிறுவனங்கள் விளம்பரங்களை வெளியிடுவதாகவும் தெரியவந்துள்ளது. கிரிப்டோகரன்ஸிகளை ஒத்த தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட விளம்பரங்களுக்கு தடை விதிக்க, ஒரு குழுவை நிர்ணயிக்கலாம் என்று பேஸ்புக்கின் விதிமுறைகள் தெரிவிக்கிறது.

கிரிப்டோகரன்ஸிக்கு தடை விதிக்க பேஸ்புக் பயன்படுத்தி வரும் வழிமுறைகளின் மூலம் கண்டறியப்படாத நிலையில் இருக்கும் விளம்பரங்களைக் குறித்து தெரிவிக்க அதன் பயனர்களை ஊக்குவிப்பதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, "உங்கள் ஓய்வூதியத் தொகையை பிட்காயின் வாங்க பயன்படுத்துங்கள்" என்பது போன்ற விளம்பரங்களை பேஸ்புக்கில் நீங்கள் காண நேர்ந்தால், அதை குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.
உணர்ச்சிப்பூர்வமான நிதிநிலை தலைப்புகளைக் கொண்ட விளம்பரங்களை, சில விதிமுறைகளின் கீழ் வெளியிட பேஸ்புக் அனுமதி அளிக்கிறது. மேலும் ஏதாவது சூதாட்டம் அல்லது கேம்மிங் சேவையாக இருக்கும்பட்சத்தில் எழுத்துபூர்வமான அனுமதியைப் பெற வேண்டும்.
இது போன்ற விளம்பரங்கள் 18 வயது நிரம்பிய பயனர்களுக்கு உரியதாக இருக்க வேண்டும். மேலும் உண்மையான கிரிப்டோகரன்ஸியாக இருந்தாலும், மேற்கண்ட வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தேவையில்லாத விளம்பரத்தைக் குறித்து ஒரு பயனர் புகாரளிக்க விரும்பினால், விளம்பரத்தின் மேற்பகுதியில் வலதுபுற முனையில் கிளிக் செய்தால் போதுமானது. பேஸ்புக்கை பயன்படுத்தும் போது பயனர் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறு நாங்கள் கேட்டு கொள்கிறோம்.
கிரிப்டோகரன்ஸி தொடர்பான ஏதாவது விளம்பரங்களைக் காணும் பட்சத்தில், அந்த விளம்பரத்தின் மேற்பகுதியின் வலதுபுற முனையில் கிளிக் செய்து புகார் அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications