ஃபேஸ்புக் மெசஞ்சர் பயனாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது!

By Siva
|

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களை பயமுறுத்திவரும் ஹேக்கர்கள் மற்றும் மால்வேர் தாக்குதல் ஆசாமிகள் தற்போது ஃபேஸ்புக் மெசஞ்சரிலும் நுழைந்துவிட்டனர்.

ஃபேஸ்புக் மெசஞ்சரில் கண்ணுக்கு தெரியாத ஆபத்து

சைபர் கிரைம் குற்றவாளிகள் ஃபேஸ்புக் மெசஞ்சரில் போலியான விளம்பரத்தை பதிவு செய்து அந்த விளம்பரத்தை க்ளிக் செய்தால் பிரபல இணையதளங்களின் டூப்ளிகேட் இணையதளத்திற்கு வரவழைத்து அதன்மூலம் வருமானம் பார்த்து வருகின்றனர்.

இந்த நூதன முறையின்படி மால்வேர் ஆசாமிகள் பல்வேறு வகைகளில் விளம்பரங்களை கிளிக் செய்ய வைத்து அதிக வருமானம் செய்து வருவதாக உலகின் முன்னனி ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் சீனியர் செக்யூரிட்டி அதிகாரி டேவிட் ஜேக்கோபி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த வகை போலி விளம்பரங்களின் மூலம் கம்ப்யூட்டரும் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள முக்கிய தகவல்களை திருடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இந்த வகை விளம்பரங்கள் பாப்-அப் வடிவில் நீங்கள் சேட் செய்து கொண்டிருக்கும் நண்பரின் அக்கவுண்டில் தோன்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சரில் கண்ணுக்கு தெரியாத ஆபத்து

எனவே ஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் தோன்று விளமபரங்களை க்ளிக் செய்யும் முன் அது உண்மையான விளம்பரம் தானா என்பதை அறிந்து கொண்டு க்ளிக் செய்யுங்கள்

2017 செப்டம்பர் 11: புதிய சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!2017 செப்டம்பர் 11: புதிய சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த வகையில் நீங்கள் சேட்டிங் செய்யும் போது ஒரு பெயரை குறிப்பிட்டு வீடியோ என்று டைப் அடித்தால் உடனே ஒருசில எமோஜிக்கள் தோன்றி அதன் அருகில் ஒரு லிங்க் வரும். அந்த லிங்க்கை உங்கள் நண்பர் க்ளிக் செய்துவிட்டால் அது ஒரு போலியான திரைப்படத்தின் லிங்க்குக்கு அவரை கொண்டு செல்லும். பின்னர் அங்கிருந்து போலியான இணையதளங்களுக்கு அழைத்து சென்று மால்வேர் ஆசாமிகளுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் கண்ணுக்கு தெரியாத ஆபத்து

மேலும் அதன் பின்னரும் உங்கள் பிரெளசர் திரும்ப திரும்ப ஒருசில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கும். இதனால் நமக்கு எரிச்சல் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்டவருக்கு வருமானம் அதிகரித்து கொண்டே போகும் என்கிறார் ஜாகோபி

இதுபோன்ற நேரங்களில் பயர்பாக்ஸ் பிரெளசர் போலியான பிளாஷ் அப்டேட் பகுதிக்கு அழைத்து சென்று அட்வேரை இன்ஸ்டால் செய்ய வைத்துவிடும். அதேபோல் கூகுள் குரோம் பிரெளசர் யூடியூப் போல் இருக்கும் ஒரு போலியான வீடியோ இணையதளத்திற்கு அழைத்து செல்லும். அதுமட்டுமின்றி கூகுள் குரோமின் போலியான எக்ஸ்டென்ஷனுக்கும் அழைத்து சென்றுவிடும்

அதேபோல் சபாரி பிரெளசரிலும் இதே போன்று டவுன்லோடு பக்கத்திற்கு அழைத்து சென்று உங்களை எதையாவது டவுன்லோடு செய்ய வைத்துவிடும்

தற்போது இந்த மால்வேர் தாக்குதலை செய்து கொண்டிருப்பவர்கள் யார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ஃபேஸ்புக் மெசஞ்சரில் இருந்து ஏராளமான நபர்களை இவ்வாறான போலியான பக்கத்திற்கு அழைத்து சென்று சம்பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை.

ஒரே ஒரு ஆறுதலான செய்தி இந்த நபர்கள் தங்களுடைய வருமானத்திற்கு மட்டும் இந்த செயலை செய்து வருகின்றனர். வேறு எந்தவித பெரிய குற்றங்களையும் இதுவரை செய்ததாக தெரியவில்லை.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் சுருக்கமாக வரும் லிங்குக்களை பெரும்பாலும் க்ளிக் செய்வதை தவிர்த்து விடுங்கள்

இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தியாளர் கூறுகையில், 'இதுபோன்ற போலியான லிங்குகளை தடுத்து நிறுத்த ஏராளமான ஆட்டோமெட்டிக் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். மால்வேர் தாக்குதல் இருப்பதாக யாராவது சந்தேகம் அடைந்து எங்களுக்கு தகவல் கொடுத்தால் அவர்களுக்கு இலவச ஆண்ட்டி வைரஸ் விநியோகம் செய்தும் வருகிறோம். அந்த ஆண்ட்டி வைரஸ் எங்களது வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் என்று நம்புகிறோம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook Messenger is plagued and rigged with malicious links that basically spread Malware among the users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X