பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்! புதிய பேமெண்ட் சேவை ரெடி!
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் சேவையில் புதிதாக வாட்ஸ் ஆப் பே என்ற பண பரிவர்த்தனை சேவையிற் இந்தியாவில் அறிமுகம் செய்ய போராடி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது புதிய பண பரிவர்த்தனை சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் போன்ற அனைத்து தளங்களிலும் தனது பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தது. அதேபோல் பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது புதிய பண பரிவர்த்தனை சேவையை தனது மெஸ்சேன்ஜ்ர் செயலி மூலம் அறிமுகம் செய்யவுள்ளது.

பேடிஎம், போன் பே, கூகுள் பே-க்கு போட்டியா?
பேஸ்புக்கிற்கு சொந்தமான மெஸ்சேன்ஜ்ர் செயலி மூலம் புதிய பண பரிவர்த்தனை சேவையை முதலில் அமேரிக்காவில் வரும் வாரத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தற்பொழுது தெரிவித்துள்ளது. பேடிஎம், போன் பே, கூகுள் பே சேவை போலவே, இந்த பேஸ்புக் பேமெண்ட் சேவையும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் கூடுதல் வசதிகாக அறிமுகம்
பல மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கை பய்னபடுத்தி வருவதனால், பேஸ்புக் தளத்தில் பேமெண்ட் சேவை இருப்பது பயனர்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும் என்று, இந்த முயற்சியை பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளதாக கூறியுள்ளது. இதேபோல் விரைவில் இன்ஸ்டாகிராம் தளத்திலும் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எப்பொழுது அறிமுகம்?
அமெரிக்காவில் அடுத்த வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த சேவைக்கு பிறகு, உலகின் மற்ற நாடுகளிலும் விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படும் என்று பேஸ்புக் கூறியுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் வாட்ஸ்ஆப் பேமெண்ட் சேவை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், பேஸ்புக் பேமெண்ட் சேவையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications