பேபால் வழியாக பணத்தை அனுப்பவும் பெறவும், பேஸ்புக் மெசஞ்சர் உதவுகிறது

|

கடந்தாண்டு பேஸ்புக் மற்றும் பேபால் சேர்ந்து முந்தைய மெசஞ்சர் அப்ளிகேஷனிலேயே பணம் செலுத்தும் ஒரு வசதியை அறிமுகம் செய்தன.

பேபால் வழியாக பணத்தை அனுப்பவும் பெறவும், பேஸ்புக்   மெசஞ்சர் உதவுகிறது

இவ்விரு நிறுவனங்களின் கைகோர்ப்பைத் தொடர்ந்து, மெசஞ்சர் பயன்படுத்துவோருக்கு தங்களின் பேபால் கணக்கை பயன்படுத்தி அப்ளிகேஷனில் பணத்தை அனுப்பவும் பெறவும் கூடிய வசதி அளிக்கப்படுகிறது.

நுகர்வோர் சேவையை கையாளும் நிலையில் ஏற்படும் சந்தேகங்களையும் உதவிக்கான கோரிக்கைகளையும் கையாளும் வகையில் பேபால் நிறுவனம் தனது முதல் நுகர்வோர் சேவையின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே தங்களின் பேபால் கணக்கை, பேஸ்புக் மெசஞ்சர் கணக்குடன் இணைத்துள்ள பயனர்களுக்கு, இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடிவதோடு, தங்களின் பில்களை வகுத்து கொள்ளவும் முடியும். மெசஞ்சர் அப்ளிகேஷன் மூலம் செய்யப்படும் எல்லா பரிவர்த்தனைகளுக்கும், பேபாலை நிரந்தர தேர்வாகவும் அமைத்து கொள்ளலாம் என்று பணம் வழங்கீடு நிறுவனம் அறிவித்துள்ளது.

சீகேட் நிறுவனம் வழங்கும் 12TB ஸ்டோரேஜ் கொண்ட ஹார்ட் டிரைவ்கள்சீகேட் நிறுவனம் வழங்கும் 12TB ஸ்டோரேஜ் கொண்ட ஹார்ட் டிரைவ்கள்

இப்போதைக்கு, மெசஞ்சருக்கு உட்பட்ட பேபால் பணம் வழங்கீடு சேவை, அமெரிக்காவில் மட்டுமே அளிக்கப்படுகிறது. மேலும் அது iOS மூலம் மட்டுமே சாத்தியமாகிறது. அடுத்த சில மாதங்களில், மெசஞ்சரைப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும், இந்த பணம் வழங்கீடு ஒருங்கிணைப்பு வசதி அளிக்கப்பட உள்ளது.

வரும் வாரங்களில் மேற்கண்ட சேவையானது, மற்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பேபால் நிறுவனம் கூறுகையில், 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களின் பேபால் கணக்கை, மெசஞ்சர் அப்ளிகேஷன் உடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் சாட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவும் பெறவும் கூடிய இந்த வசதி, உலகளவில் விரிவுப்படுத்தும் நிலையில், மேற்கண்ட எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் பெரும்பாலான பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புவார்கள்.

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதாகும். மெசஞ்சர் அப்ளிகேஷனில் உள்ள '+' ஐகானை தட்டி, அடுத்துவரும் மெனுவில் உள்ள பச்சை நிறத்தில் உள்ள '$' குறியைத் தட்டவும். இங்கு நீங்கள் அனுப்ப அல்லது பெற நினைக்கும்தொகையைப் பதிவு செய்து, ஒரு சிறு குறிப்பைச் சேர்க்கவும்.

நீங்கள் எண்டரைத் தட்டிவுடன், உங்கள் பேபால் கணக்கு அல்லது டெபிட் கார்ட் உடனான இணைப்பைப் பெற, அப்ளிகேஷன் உதவுகிறது. அங்கு, பண வழங்கீடு முறையாக பேபாலை நீங்கள் தேர்வு செய்து, பணப் பரிமாற்றத்தைத் தொடரலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook Messenger has got the PayPal integration that lets users send or receive money within the app.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X