Home
Apps

பேஸ்புக் மெஸ்சேன்ஜரில் களமிறங்கிய முக்கியமான 'பாதுகாப்பு' அம்சம்!

பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தப் பல நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. பயனர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஒரு அட்டகாசமான சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய சேவை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் தனது மெஸ்சேன்ஜர் சாட் பயன்பாட்டில் புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு யார் மெசேஜ் அனுப்பலாம் என்பதைப் பயனர்களே கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இதன் கீழ் மெஸ்சேன்ஜர் பயன்பாடு கூடிய விரைவில் இன்னும் சில புதிய அமைப்புகளைச் சோதிக்கத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

 புதிய அம்சம்

இந்த புதிய அம்சம், உங்களுக்கு யார் மெசேஜ் செய்தியை அனுப்பலாம் அல்லது நேரடியாக வாய்ஸ் கால்லிங் அழைப்புகளை அழைக்கலாம் என்பதற்கான அனுமதியை வழங்குகிறது. அதேபோல், உங்களுடைய மெஸ்சேன்ஜர் சாட்டிங் ரெக்வஸ்ட் ஃபோல்டர்களுக்கு யார் செல்ல வேண்டும் அல்லது யார் உங்களுக்கு மெசேஜ் அனுப்பவோ, கால் அழைக்கவோ கூடாது என்று இனி நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்.

மெஸ்சேன்ஜர்

பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சங்கள் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் உள்ள அம்சங்கள் போலவே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இந்த அம்சத்தை நிறுவனம் டிசம்பர் மாதம் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பேஸ்புக் நண்பராக இல்லாத பயனர்கள் அனுப்பிய படங்களைத் தானாக மழுங்கடிக்கும் ஒரு அம்சத்தையும் மெஸ்சேன்ஜர் பரிசோதித்து வருகிறது. இது ஸ்பேம் வகையில் சேரும் என்று கூறியுள்ளது.

ஆப் லாக்

அதேபோல், மெஸ்சேன்ஜர் தற்பொழுது அதன் பயன்பாட்டில் லாக்கிங் அம்சத்தையும் கொண்டு வருவதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. சரியான சோதனைக்குப் பின் இப்போது அதன் பயன்பாட்டில் "ஆப் லாக்" என்ற அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் சரிந்துள்ளது.

பிங்கர் பிரிண்ட் அன்லாக்

இனி மெசேஜ்களை அனுப்பவும் படிக்கவும் பேஸ் அன்லாக் அல்லது பிங்கர் பிரிண்ட் அன்லாக் செய்ய வேண்டும். இந்த அம்சம் இப்போது iOS இல் கிடைக்கிறது, மேலும் இந்த புதிய அம்சம்ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கூடியவிரைவில் கிடைக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger Introduces App Lock And New Privacy Settings : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X