இனி மெசஞ்சரில் அது செயல்படாது: நிறுவனம் நடவடிக்கை

|

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளில் ஒன்றாகிய ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அவ்வப்போது புதிய வசதிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. குறிப்பாக அதில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்பை கருதி அவ்வப்போது சில திருத்தங்கள் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மேலும் சில புதிய வசதிகளை செய்து பாதுகாப்பினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதிகள் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்தால் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

’சீக்ரெட் உரையாடல்’

’சீக்ரெட் உரையாடல்’

ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பதிவு செய்யப்படும் உரையாடல்களின் பாதுகாப்புக்கு சமீபத்தில் 'சீக்ரெட் உரையாடல்'என்ற புதிய வசதியை இணைத்தது. இந்த 'சீக்ரெட் உரையாடல்' என்பது முழுக்க முழுக்க பாதுகாப்பானது ஆகும்.

சைன்-அப் செய்யும் வசதி

சைன்-அப் செய்யும் வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் சேவையில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் கொண்டு சைன்-அப் செய்யும் வசதியினை சத்தமில்லாமல் நீக்கி இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மெசஞ்சர் சேவையை பயன்படுத்த தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டினை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர்

புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர்

இந்த புதிய விதிமுறை ஃபேஸ்புக் மெசஞ்சர் மற்றும் மெசஞ்சர் லைட் சேவைகளிலும் அடங்கும். புதிதாக மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோர் இனி தங்களது ஃபேஸ்புக் அக்கவுண்ட் கொண்டு லாக் இன் செய்ய வேண்டியது அவசியம்.

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி

தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி

இதுகுறித்து, ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தற்சமயம் மெசஞ்சர் சேவையை ஃபேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சைன் இன் செய்தவர்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படாது.

எந்த மாற்றமும் இருக்காது

எந்த மாற்றமும் இருக்காது

மேலும் அக்கவுண்ட் இல்லாமல் மெசஞ்சர் சேவையை பயன்படுத்துவோருக்கும் எந்த மாற்றமும் இருக்காது. பேஸ்புக்கின் முன்னணி குறுந்தகவல் சேவைகளான மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைக்கும் திட்டத்தின் கீழ் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Facebook messenger ignore that option

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X