Home
Apps

பேஸ்புக் மெசஞ்சரில் புதிய டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் அறிமுகம்.!

இப்போது மெசஞ்சரில் அறிமுப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் வசதி பொறுத்தவரை இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலிய பயனர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது.

By Prakash

பேஸ்புக் பொறுத்தவரை தற்போது பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதன் வரிசையில் இப்போது பேஸ்புக் மெசஞ்சரில் புதிய டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது இந்த பேஸ்புக் நிறுவனம்.

இப்போது மெசஞ்சரில் அறிமுப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் வசதி பொறுத்தவரை இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலிய பயனர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது கூடிய விரைவில் உலகம் முழுவதும் இவை பயன்பாட்டிற்க்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் என்பது நீங்கள் தானாகவே மெசஞ்சரில் உள்ள உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைகளை வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை பார்ப்போம்.

ஸ்டிக்கர்களை அனுப்புதல் :

ஸ்டிக்கர்களை அனுப்புதல் :

'நன்றி' அல்லது 'பாய்-பை' போன்ற ஸ்டிக்கர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் வழங்குகிறது இந்த அட்டகாசமான பயன்பாடு.

லொகேஷன் :

லொகேஷன் :

நீங்கள் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு எம் பரிந்துரைக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் நீங்கள்
எங்கே இருக்கிறீர்கள் என்பதை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

 திட்டம்:

திட்டம்:

ஒரு குழுவுடன் ஒரு திட்டத்தை அமைக்க இது உதவியாக இருக்கும், அதவாது எம் மெசஞ்சரில் திட்டமிடல் திறன்களைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாக்கெடுப்பு:

வாக்கெடுப்பு:

ஒரு முறை மற்றும் அனைத்திற்கும் முடிவு செய்ய வாக்கெடுப்பை உருவாக்குவது பரிந்துரைக்கும் இந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் பயன்பாடு.

பிறந்தநாள்:

பிறந்தநாள்:

டிஜிட்டல் அசிஸ்டன்ட் எம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஸ்டிக்கர்கள், கார்டுகள் மற்றும் வீடியோக்கள் போன்ற புதிய வசதிகளை செய்துதரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குரல் மற்றும் வீடியோ அழைப்பு:

குரல் மற்றும் வீடியோ அழைப்பு:

இந்த சேவையில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்றவற்றை அனுமதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook Messenger has launched its digital assistant M in the UK and Australia ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X