பேஸ்புக் மெசன்ஜர்: விளம்பரங்களை டெவலப்பர்களே மானிடைஸ் செய்யும் வசதி அறிமுகம்

|

உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக பேஸ்புக் மெசன்ஜர் செயலி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் மெசன்ஜர் செயலியில் பயன்தரும் வகையில் பல்வேறு அம்சங்களை பேஸ்புக் தொடர்ந்து வழங்கி வருகிறது.

பேஸ்புக் மெசன்ஜர்: விளம்பரங்களை டெவலப்பர்களே மானிடைஸ் செய்யும் வசதி

2016-ம் ஆண்டு வாக்கில் பேஸ்புக் மெசன்ஜரில் கேம்ஸ் சேர்க்கப்பட்டது. வெவ்வேறு டெவலப்பர்களிடம் இருந்து சுமார் 20-க்கும் அதிகமான கேம்கள் வழங்கப்பட்டன. சர்வதேச அளவில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேம்பிளே அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அதிகப்படியான வசதிகளை டெவலப்பர்களுக்கு பேஸ்புக் வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மெசன்ஜரில் விளபம்ரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மெசன்ஜர் செயலியில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட டெவலப்பர்களுக்கு வீடியோ விளம்பரங்களை சோதனை செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நோக்கியா 7 - அறிமுக தேதி அறிவிப்பு; என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?நோக்கியா 7 - அறிமுக தேதி அறிவிப்பு; என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.?

சோதனை அடிப்படையில் கேம் விளையாடுபவர்களுக்கு கேம் விளையாடும் போது இடையிடையே விளம்பரங்கள் தெரியும். முதற்கட்டமாக பேஸ்கெட்பால் FRVR மற்றும் பிளாக்ஸ்டார்ம் எவர்விங் உள்ளிட்டவற்றில் விளம்பரங்கள் சேர்க்கப்படுகிறது.

துவக்கத்தில் சிறு அளவில் துவங்கி, கேம் டெவலப்பர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் படி சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு, டெவலப்பர்களே விளம்பரங்களை மானிடைஸ் செய்யும் வசதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் தொடர்ந்து வீடியோ விளம்பரங்கள் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. வரும் வாரங்களில் வீடியோ விளம்பரங்களுக்கென ஆப்டிமைஸ் செய்யப்பட இருக்கிறது.

விளம்பரங்களை ஆப்டிமைஸ் செய்ய பல்வேறு டெவலப்பர் டூல்களை பேஸ்புக் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் டெவலப்பர்கள் வருமானம் ஈட்ட முடியும் என்பதால், கேமிங் தளம் தொடர்ந்து வளர்ச்சியை காணும்.

மானிடைஸ் செய்து மட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களும் வழங்கப்பட இருக்கிறது. பீட்டா சோதனைகளில் கேம் டெவலப்பர்கள் தங்களது கேம்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook Messenger lets developers monetize ads with the new ability given to them and this will be rolled out in phases.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X