பேஸ்புக்கில் 'டேக்' செய்து செய்து சலித்து விட்டதா.? வருகிறது ஷார்ட்கட்.!
பேஸ்புக் பொறுத்தவரை பதிவுகளில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்ட்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கும் வண்ணம் உள்ளது, அந்த வகையில் தற்சமயம் இப்போது புதிய முயற்சியை பேஸ்புக் செயல்படுத்தியுள்ளது, பேஸ்புக் பயனர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும்.
தற்சமயம் பேஸ்புக் பதிவுகளின் கமெண்ட்களில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்ட்கட் அம்சத்தை விரைவில் வழங்கும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பயன்பாடு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

புதிய ஷார்ட்கட்:
பேஸ்புக் பொறுத்தவரை பதிவுகளில் நண்பர்களை டேக் செய்ய புதிய ஷார்ட்கட் அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது, அதன்படி இந்த புதிய ஷார்ட்கட் அம்சம் விரைவில் வெளிவரும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குறியீடு:
இந்த ஷார்ட்கட் அம்சம் பொதுவாக கமெண்ட்களில் நண்பர்களின் பெயரை டைப் செய்யும் முன்பு @ எனும் குறியீடை டைப் செய்து டேக் செய்யும் படி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் வாட்ஸ் :
பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் இந்த பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:
பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக பேஸ்புக் ஆப்
மற்றும் பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் போன்றவற்றில் இதனைப் பார்க்க முடியும். அதன்பின் லைவ் மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் இவற்றில் பார்க்க முடியும்.

அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார்:
அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற சேனல்களில் பல்வேறு நிகழ்சிகள் மற்றும் நேரடி ஒளிபரப்பு போன்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன,இப்போது அந்த வரிசையில் பேஸ்புக் வாட்ச் நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4கே ரெசல்யூஷன் :
பேஸ்புக் மெசன்ஜர் அப்டேட்டின் மூலம் இப்போது 4கே ரெசல்யூஷன் தரத்தில் புகைப்படங்களை அனுப்பும் வசதி செய்துதரப்பட்டுள்ளது, இதன் மூலம் அனைத்து 4கே புகைப்படங்களை மிக எளிமையான முறையில் மெசன்ஜர் பகுதியில் அனுப்பமுடியும்.


Click it and Unblock the Notifications