ஃபேஸ்புக்கில் சாட் செய்ய அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்

Written By:

ஃபேஸ்புக் லைவ் என்பது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் அதனை மிகவும் விருப்பத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஃபேஸ்புக் லைவ்-இல் ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு புதிய ஆப்சன்களை கூடுதலாக அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் சாட் செய்ய அறிமுகமாகியுள்ள புதிய வசதிகள்

அவை நண்பர்களுடன் சாட் செய்வது ஒன்று, இன்னொன்று லைவ் வித் என்ற ஆப்சன். இந்த இரண்டு ஆப்சன்களும் பயனாளிகள் தங்களுடைய எண்ணங்களை நண்பர்களிடத்தில் பகிரவும், அதே நேரத்தில் நண்பர்களை நேரடியாக இணைக்கவும் உதவுகிறது. இந்த புதிய வசதிகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டுவித மொபைல் போன்களிலும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் லைவ் சேட் என்ற ஆப்சனில் லைவ் ஆகி கொண்டிருக்கும் இந்த பிராட்கேஸ்டிலும் நீங்கள் உங்கள் நண்பரை சாட் செய்ய அழைக்கலாம். நீங்கள் இருக்கும் அதே பிராட்கேஸ்ட்டில் உங்கள் நண்பரும் இருந்தால் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய அவசியமே இல்லை, உங்களுடன் தனிப்பட்ட சாட்டிற்கு அவரை உடனடியாக இணைத்து கொள்ளலாம்.

ரூ.4,999/-ல் எந்தவொரு லேப்டாப்பையும் டச் ஸ்க்ரீனாக மாற்றலாம், எப்படி.?

மேலும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் சாட் செய்து கொண்டிருக்கும்போதே நீங்கள் பப்ளிக் உரையாடலிலும் எந்த நேரத்திலும் கலந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதி தற்போது சோதனை வடிவத்தில் இருப்பதால் இப்போதைக்கு ஒருசில நாடுகளில் மட்டும் இயங்கி வருவதாகவும், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்களில் செயல்படும் இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் மாற்றப்படும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள லைவ் வித் என்ற ஆப்சன் இப்போதைக்கு ஐஒஎஸ் போன்களில் மட்டுமே செயல்படும் வகையில் உள்ளது. நண்பர்களை லைவ் வீடியோ சாட்டிற்கு அழைக்கும் இந்த வசதியை ஐஒஎஸ் போன் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்

நீங்கள் லைவ் வித் ஆப்சனை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் தான் லைவ் வியூவர்ஸ் செக்சனுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். இந்த வியூவர் செக்சனில் நீங்கள் யாருடன் சாட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த பெயரை டேப் செய்ய வேண்டும். அதே நேரத்தில் உங்கள் அழைப்பை உங்களது நண்பர் ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் அவரது விருப்பம். அவர் விரும்பவில்லை என்றால் நீங்கள் அவருடன் சாட் செய்ய முடியாது.

மேலும் நேரடி வீடியோவில் சேர அழைக்கப்பட்ட நண்பர், நீங்கள் இருக்கும் இடத்தில் அதே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த வசதியில் வீடியோவை நீங்கள் போர்ட்ராய்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரண்டு வகையிலும் வைத்து சாட் செய்யலாம்.

Read more about:
English summary
Facebook has come up with two new features - 'Live Chat With Friends' and 'Live With'.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot