புதிய பேஸ்புக் பக் கண்டுபிடிப்பு.! இன்னுமா இது பேஸ்புக் நிறுவனத்திற்கு தெரியல?
பேஸ்புக்கை எளிமையாய் பயன்படுத்துவதற்காக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் லைட் என்ற குறைந்த அளவு சேமிப்பு கொண்ட லைட் செயலியை அறிமுகம் செய்தது. அதில் பக் இருப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் செயலியை இதுவரை பல பில்லியன் பயனர்கள் கூகுள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பேஸ்புக்கை எளிமையாய் பயன்படுத்துவதற்காக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக் லைட் என்ற குறைந்த அளவு சேமிப்பு கொண்ட லைட் செயலியை அறிமுகம் செய்தது. அதில் பக் இருப்பது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சையில் சிக்கி வரும் பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் பல சர்ச்சையில் சிக்கி வருகின்றது. அதுபோல தற்பொழுது பேஸ்புக் லைட் செயலியில் பக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தான், தனது பேஸ்புக் லைட் செயலியை அப்டேட் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரொபைல் போட்டோ பத்திரம்
உங்கள் நண்பரின் ப்ரோபைலை கிளிக் செய்யும் பொழுது அவர்களின் ப்ரொபைல் போட்டோவிற்கு பதிலாக உங்களின் ப்ரொபைல் போட்டோ அவர்களின் பெயர்களுக்கு மேல் காண்பிக்கப்படுகிறது. லாகின் செய்யப்பட்ட அக்கௌன்ட்டில் உள்ள ப்ரொபைல் போட்டோ தான் குறிப்பிட நண்பர் மற்றும் இன்றி அணைத்து நண்பர்களின் ப்ரொபைல் போட்டோவிளும் தெரிகின்றது.

பேஸ்புக் லைட் செயலியில் பக்
உங்களுடைய பேஸ்புக் லைட் செயலியில் மட்டுமே இந்த பக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உங்களின் பேஸ்புக் செயலியில் இதுவரை எந்த பக்குகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அப்டேட்டிற்கு பிறகு தான், இந்த பக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மொழிகளில் எழுத்து பிழை
இதுமட்டுமின்றி பேஸ்புக் லைட் செயலில் இந்திய மொழிகளில் டைப் செய்யும் பொழுதும், போஸ்ட் செய்யும் பொழுதும் எழுத்துக்கள் உடைகின்றன, அதிக அளவிலான எழுத்துக்கள் தெரிவதில்லை என்ற புகாரும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேஸ்புக் லைட் பக்கை பேஸ்புக் நிறுவனம் எப்பொழுது சரி செய்யும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications