குழந்தைகளுக்கான புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி அறிமுகம்.!
இந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலி தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, அதன்பின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தற்சமயம் புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அந்தவரிசையில் குழந்தைகளுக்கான புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் அறிவித்த தகவலின் அடிப்படையில் 13-வயதிற்கும் குறைவான குழைந்தைகள் இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு குறுந்தகவலை அனுப்ப வழிசெய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலியை பொறுத்தவரை குழந்தைகள் தங்களது நண்பர்களை சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது, பெற்றோர் கட்டுப்படுத்தக் கூடிய நிறைய அமச்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மெசன்ஜர் கிட்ஸ் செயலி பொதுவாக பெற்றோர் பயன்படுத்தும் பேஸ்புக் கணக்கிலேயே எக்ஸ்டென்ஷன் செய்யப்படும், மேலும் குழந்தைகளுக்கு தனி கணக்கு வழங்கப்பட மாட்டாது.
இந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலி தற்சமயம் அமெரிக்காவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது, அதன்பின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடிய விரைவில் இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் இந்த செயலி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி பொறுத்தவரை வீடியோ சாட், எமோஜி மற்றும் சவுண்டு எஃபெக்ட்களை பயன்படுத்த முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல கட்டுபாடுகள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications